உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து கே.ஜி.பாலகிருஷ்ணனை நீக்க வேண்டும் என்று கோரி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் கே.ஜி., பாலகிருஷ்ணன் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தனது உறவினர்கள் பேரில் சொத்துக்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி SH KAPADIA தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.ஜி. பாலகிருஷ்ணன் பெயரில் சொத்துகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாலகிருஷ்ணன் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேடுகள் தொடர்பாக, தகுந்த அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2000ம் ஆண்டு ஜூன் மாதம் கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 மே மாதம் ஓய்வு பெற்ற பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
0 comments:
Post a Comment