சென்னை, மே 12 : ஜுன் 4ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.4ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தேர்வுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண் பதிவு செய்யும் பணிகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவை அறிவிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை திணமணி.காம் வெளியிட உள்ளது.
0 comments:
Post a Comment