Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24-

பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால்தான் இழப்பை முழுமையாக சமாளிக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறுகின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய மந்திரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். டீசல் விலையை மத்திய அரசு சற்று உயர்த்தக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More