நாடு முழுவதும் கடந்த 13 நாட்களாக பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய அலெக்ஸ்பால் மேனனின் கடத்தல் சம்பவம் இன்று மாலை சுமார் 6,30 மணிக்கு முடிவுக்கு வந்தது. விடுவிக்கப்பட்டார் என்று கூறப்பட்ட கடைசி நேரத்திலும் கூட தெளிவான தகவல் இல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் எகிறிய இதயத் துடிப்பு, அலெக்ஸ் பாலை நேரில் பார்த்த பின்னரே சீரானது. மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பாலை அழைத்துக் கொண்டு தூதர்கள் வந்தார்கள் . ----------------------------------------------------------------------------------------------------
Facebook சமூக தளம் வெறும் பொழுதுபோக்குக்கானது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வேறு பல புதிய சேவைகளையும் தரத் தொடங்கியுள்ளது. அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனர் தெரிவித்தார் ---------------------------------------------------------------------------------------
வரி உயர்வு நடவடிக்கை மூலம் தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு போராடி வரும் நிலையில், பெண்கள் நகை வாங்குவதை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்க நகை வாங்கினால் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று இந்திய மதிப்புமிக்க கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. -------------------------------------------------------------------------------------------------------
இந்திய திரைப்பட உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது. தமிழில் வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்கள் ஐந்து விருதுகளை பெற்றுள்ளன. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ---------------------------------------------------------------------------------------------------
நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 13வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். இந்த வேலைநிறுத்தத்தால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரங்கள் இயக்கபடவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை .------------------------------------------------------------------------------------------------
Posted in: latest news
0 comments:
Post a Comment