Showing posts with label latest chennai news.latest taminadu news. Show all posts
Showing posts with label latest chennai news.latest taminadu news. Show all posts

Thursday, June 21, 2012

இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

ரியோ-டி-ஜெனிரோ, ஜூன் 21-

மெக்சிகோவில் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலில் நடக்க இருக்கும்  ‘ரியோ பிளஸ் 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ரியோடி ஜெனிரோ சென்றார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு ஆகியவை குறித்து இதில் பங்கேற்கும் பல நாட்டுத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதனிடையே இன்று மன்மோகன் சிங் சீன பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரு நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படும் பாஸ்மதி அரிசியை சீனாவுக்கு இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை 2006-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்துக்கு சீன பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Thursday, June 7, 2012

நாட்டின் முதலாவது "பேசும் ஏடிஎம்'

ஆமதாபாத், ஜூன். 7: பார்வையற்றோருக்கான முதலாவது "பேசும் ஏடிஎம்' இயந்திரம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.  யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இந்த பேசும் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.சர்கார் அதைத் திறந்து வைத்தார்.  இந்த ஏடிஎம் இயந்திரத்தில் "ஹெட்ஃபோன்' பொருத்தவதற்கான வசதி இருக்கிறது. இந்த ஹெட்போன் மூலம் வழிகாட்டும் ஒலிக்குறிப்புகளைக் கேட்க முடியும்.  அதைப் பின்பற்றி பார்வையற்றவர்கள் ஏடிஎம் இயந்திரத்தைத் தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.  சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் இந்த பேசும் ஏடிஎம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இதைப் பயன்படுத்தலாம்.

Saturday, May 26, 2012

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன்-நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அ.தி.மு.க. தனது வேட்பாளரை அறிவித்துவிட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடாது என அறிவித்தது. தொடர்ந்து பா.ம.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியது. முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வும் போட்டியிடாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஐக்கிய ஜனநாயக கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட கட்சி தலைராக இருக்கும் சீனிவாசன் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

Saturday, May 19, 2012

தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்க கடலோர காவல் படையில் அதிநவீன ரோந்து கப்பல்

சென்னை: கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையில் ‘‘ராஜ்தரங்’’ என்ற அதிநவீன ரோந்து கப்பலை சேர்க்கும் விழா, சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பல்லம் ராஜூ, ரோந்து கப்பலை இயக்கி பணியில் சேர்த்தார்.
மத்திய இணை அமைச்சர் பல்லம் ராஜூ அளித்த பேட்டி: ‘ராஜ்தரங்’ என்ற ரோந்து கப்பல் தீவிரவாதிகள் ஊடுருவல், கடத்தல், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை பாதுகாத்தல் மற்றும் கடலோரங்களை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக செயல்படும். இந்த கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பலில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ரோந்து பணியில் கப்பல் ஈடுபட்டிருக்கும் போது, அங்கு நிகழும் சம்பவங்கள் உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும். கடலோர காவல் படையில், தற்போது பணியில் சேர்ந்திருப்பது 8வது அதிநவீன ரோந்து கப்பலாகும்.

மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் உள்ளே வந்தனர். இதுபோல், மீண்டும் ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே, கடலோரங்களை பலப்படுத்த நவீன ரோந்து கப்பல்கள் கடலோர காவல் படையில் சேர்க்கப்படுகிறது. வேளாண்மை மற்றும் மீன் வளத்துறை இணைந்து செயற்கைகோள் மூலம் கடலில் மீன்வளம் அதிகமுள்ள இடங்கள், கடல் எல்லைகள் போன்ற படங்களை எடுத்து அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. மீனவர்கள் கடலில் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வதும், மீனவர்கள் கடலில் வழித்தவறி போவது தடுக்கப்படும். எல்லைத் தாண்டி மீன்பிடிக்க கூடாது என்ற விழிப்புணர்வு மீனவர்களுக்கு வரவேண்டும். கடலோர காவல் படை கண்காணிப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலோர காவல் படை மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடலோர காவல் படை டைரக்டர் ஜெனரல் முரளிதரன் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கடலில் மீன்பிடி படகு மீது மோதி மீனவர்கள் உயிரிழக்க காரணம், கடலோர காவல் படை கப்பல் இல்லை. அந்த வழியாக சென்ற வேறு ஏதோ ஒரு கப்பல்தான் மீன்பிடி படகு மீது மோதியுள்ளது. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More