skip to main |
skip to sidebar
9:33 AM
VTM
ஆமதாபாத், ஜூன். 7: பார்வையற்றோருக்கான முதலாவது "பேசும் ஏடிஎம்' இயந்திரம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இந்த பேசும் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.சர்கார் அதைத் திறந்து வைத்தார். இந்த ஏடிஎம் இயந்திரத்தில் "ஹெட்ஃபோன்' பொருத்தவதற்கான வசதி இருக்கிறது. இந்த ஹெட்போன் மூலம் வழிகாட்டும் ஒலிக்குறிப்புகளைக் கேட்க முடியும். அதைப் பின்பற்றி பார்வையற்றவர்கள் ஏடிஎம் இயந்திரத்தைத் தடையில்லாமல் பயன்படுத்த முடியும். சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் இந்த பேசும் ஏடிஎம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இதைப் பயன்படுத்தலாம்.
0 comments:
Post a Comment