Showing posts with label high court. Show all posts
Showing posts with label high court. Show all posts

Saturday, May 12, 2012

திரிபுரா ,மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக ஐகோர்ட்டுகள‌ை உருவாக்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது

புதுடில்லி:திரிபுரா ,மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக ஐகோர்ட்டுகள‌ை உருவாக்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது. இதுகுறித்து திரிபுரா சட்டத்துறை செயலாளர் தத்தாமோகன்ஜமாத்தியா கூறு்கையில்‌ லோக்சபாவில் அனுமதி பெற்றப்பட்டதையடுத்து நீதிமன்றம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார். தற்போது லோக்சபாவில் நிறை‌வேற்றப்பட்ட இந்த தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனு்ப்பிவைக்கப்படும். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலத்திற்கு மட்டுமே தனியாக ஐகோர்ட்உள்ளது மற்ற ஆறு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் நாகலாந்து மற்றும் அருணாசலபிரதேச மாநிலங்களுக்கான வழக்குகள் அனைத்தும் கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.

Wednesday, May 9, 2012

சிறை தண்டனையை எதிர்த்து மாஜி மத்திய அமைச்சர் மனு


புதுடில்லி:லஞ்சம் வாங்கிய வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய ராணுவ அமைச்சர் பங்காரு லட்சுமணன், தண்டனையை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.
முன்னாள் ராணுவ அமைச்சரும், பா.., முன்னாள் தலைவருமான பங்காரு லட்சுமணன், 11 ஆண்டுகளுக்கு முன், ராணுவத்திற்கு அதிநவீன பைனாகுலர்கள் வாங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அவர் லஞ்சம் வாங்குவதை தனியார் இணையதள நிறுவனம், ரகசிய கேமராவில் படமெடுத்து வெளியிட்டது.

இதுகுறித்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை 11 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 28ம் தேதி, இவ்வழக்கில் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக்கோரி, அவர் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, நாளை (11ம் தேதி) விசாரணைக்கு வரும் என அவரது வழக்கறிஞர் அதுல் குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியில் இருந்து கே.ஜி.பாலகிருஷ்ணனை நீக்க வேண்டும் என்று கோரி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் கே.ஜி., பாலகிருஷ்ணன் 40 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தனது உறவினர்கள் பேரில் சொத்துக்கள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி SH KAPADIA தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கே.ஜி. பாலகிருஷ்ணன் பெயரில் சொத்துகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பாலகிருஷ்ணன் மீது எடுக்கப்படும் அல்லது எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முறைகேடுகள் தொடர்பாக, தகுந்த அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 2000ம் ஆண்டு ஜூன் மாதம் கே.ஜி.பாலகிருஷ்ணன், உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். 2007 ஆம் ஆண்டு அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2010 மே மாதம் ஓய்வு பெற்ற பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More