புதுடில்லி:லஞ்சம் வாங்கிய வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய ராணுவ அமைச்சர் பங்காரு லட்சுமணன், தண்டனையை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.
முன்னாள் ராணுவ அமைச்சரும், பா.ஜ., முன்னாள் தலைவருமான பங்காரு லட்சுமணன், 11 ஆண்டுகளுக்கு முன், ராணுவத்திற்கு அதிநவீன பைனாகுலர்கள் வாங்குவதற்காக லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. அவர் லஞ்சம் வாங்குவதை தனியார் இணையதள நிறுவனம், ரகசிய கேமராவில் படமெடுத்து வெளியிட்டது.
இதுகுறித்த வழக்கு, டில்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை 11 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த 28ம் தேதி, இவ்வழக்கில் அவருக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து அவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை ரத்து செய்யக்கோரி, அவர் டில்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, நாளை (11ம் தேதி) விசாரணைக்கு வரும் என அவரது வழக்கறிஞர் அதுல் குமார் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment