புதுடில்லி:திரிபுரா ,மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக ஐகோர்ட்டுகளை உருவாக்க மத்திய அரசு அனுமதிவழங்கியுள்ளது. இதுகுறித்து திரிபுரா சட்டத்துறை செயலாளர் தத்தாமோகன்ஜமாத்தியா கூறு்கையில் லோக்சபாவில் அனுமதி பெற்றப்பட்டதையடுத்து நீதிமன்றம் கட்டுவதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்கப்படும் என தெரிவித்தார். தற்போது லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனு்ப்பிவைக்கப்படும். தற்போது வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம் மாநிலத்திற்கு மட்டுமே தனியாக ஐகோர்ட்உள்ளது மற்ற ஆறு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம் நாகலாந்து மற்றும் அருணாசலபிரதேச மாநிலங்களுக்கான வழக்குகள் அனைத்தும் கவுகாத்தி உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என மூத்த வக்கீல் ஒருவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment