Showing posts with label health tip. Show all posts
Showing posts with label health tip. Show all posts

Saturday, May 26, 2012

அரிசியில் கவனம்

அரிசியில் கவனம்

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு களின்படி, நாள்தோறும் ஒரு கப் வெள்ளை அரிசி சாதம் உண்பவர்களுக்கு "டைப்-2' சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளும் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் மிக முக்கிய உணவாக, அரிசி உணவையே நாள் தோறும் உண்கின்றனர். எனவே அவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிக அளவில் கிலைசிமிக்ஸ் இன்டக்ஸ் உள்ளது. அதில் எந்த சத்துகளும் இல்லாமல் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவே அது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே தற்போது "டபுள் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி' என வரும் விளம்பரங்களின் மீது நுகர்வோர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

Tuesday, May 15, 2012

யோகாசனத்தின் கட்டுப்பாடுகள்

சாப்பிட்டு குறைந்தது 4 மணி நேரம் சென்ற பிறகும். காபி, டீ, குடித்தால் 1 மணி நேரம் கழிந்த பின்பும் ஆசனங்கள் செய்யலாம்.

• இரவில் நீண்ட நேரம் விழித்திருத்தல், நீண்ட தூரம் பயணம் செய்த நாள், எண்ணெய் தேய்த்து குளித்த நாள் மற்றும் உடல் சோர்வு, தலைவலி, இருக்கும் போதும் ஆசனங்கள் செய்யாது சாந்தி ஆசனம் மட்டும் செய்யலாம்.

• யோகப் பயிற்சி செய்பவர்கள் உருளைக் கிழங்கு மசாலா உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

• வெறும் தரையில் யோகா பயிற்சி செய்யக் கூடாது . பாய் (அ) விரிப்பு விரித்து தான் செய்ய வேண்டும்.

• காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களாகிய சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைச் செய்த பின்பே ஆசனம் பயில வேண்டும்.

• யோகாசனம் செய்யும் முன்போ அல்லது செய்த உடனேயோ குளிப்பது ஏற்றதல்ல.

• உடல் உறவு கொள்ளும் நாட்களிலும் ஆசனம் செய்தல் கூடாது.

• வயிற்றில் வலி உடையவர்கள் யோகாசனம் செய்தல் கூடாது.

• தலைவலி இருக்கும் நாட்களில் ஆசனம் செய்ய வேண்டாம்.

• திறந்த வெளியில் அல்லது காற்றோட்டமான அறையில் ஆசனம் செய்தல் வேண்டும். காபி, டீ, புகையிலை, லாகிரி வஸ்துகள், மது அறவே கூடாது.

• யோகாசனம் செய்யும் போது வேறு உடற்பயிற்சி கூடாது.

• இதய நோயுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர் ஆலோசனையுடன் யோகாசனத்தைத் தேர்வு செய்து செய்தல் நன்று.

•  யோகாசனத்தைத் தினமும் அரை மணி முதல் இரண்டு மணி வரை செய்து பழகலாம்.

• யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் போதும், முடிக்கும் போதும் இரண்டு நிமிடம் அமைதியாக பத்மாசனம் (அ) சுகாசனத்தில் அமரவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More