மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஊழியர் ஒருவர் பலியானார். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தீ விபத்தால் 40 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகி்றது. நிலைமை சீராக 3 வாரம் முதல் 2 மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்று காலை மின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதால் மின்வெட்டு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டூரில் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு கன்வெயர் பெல்ட் மூலம் நிலக்கரி எடுத்து செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்ய 14 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து செல்லப்படுகிறது.
நிலக்கரி யார்டிலிருந்து மின் உற்பத்திக்காக 4 மெயின் கன்வெயர் பெல்ட்களில் இந்த நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. இந்த பெல்ட்டில் நேற்று நள்ளிரவு 12.45 மணியளவில்திடீர் தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 200 அடி தூரத்திற்கு கன்வெயர் பெல்டில் தீபிடித்தது. இதனால் தீ மளமள எரிந்து அஙகிருந் ஒரு கோபுரத்தில் பற்றியதில் கோபுரம் சரிந்து கீழே விழுந்தது. இந்த தீ பல இடங்களுக்கு பரவியது. இந்த தீ விபத்தில் மின்நிலைய ஊழியர் நல்லதம்பி(50) என்பவர் தீயில் கருகி பலியானர். மேலும் கோபால் , செயற்பொறியாளர் ஒருவர் என இருவர் படுகாயமடைந்து மேட்டூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல் தீக்காயம் அதிகமாக இருந்ததால் இவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.
தீயை அணைக்கும் பணியில் சேலம், மேட்டூர் அனல் மின் நிலைய தீயணைப்புத்துறை ஊழியர்கள் 40க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதில் மேலும் பலக்கு காயம் ஏற்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. அனல் மின் நிலையத்தில் 500 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் எந்த நேரத்திலும் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் நிலக்கரியினை கன்வெயர் பெல்ட் மூலம் கொண்டு செல்லும் பணியில் தடை ஏற்பட்டுள்ளதால் . மின் உற்பத்தி இன்று காலை 5 மணி முதல் நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.
மின்வெட்டு அதிகரிக்கும்: நேற்றுநள்ளிரவில் நடந்த தீவிபத்தால் மேட்டூர் அனல் மின்நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி தடை ஏற்பட்டுள்ளது. இன்று காலை 5 முதல் மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் தீவிபத்தால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய 1 மாதம் ஆகும் என்பதால் மின்வெட்டு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது மேட்டூர், இடைப்பாடி, பவானி ,சேலம் உள்பட பல பகுதிகளிலிருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 50 வீரர்கள் தீயை அதணத்தனர். 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் 800 மீ. நீளமுள்ள கன்வெயர் பெல்ட் தீயில் கருகி சேதமடைந்தது. இருப்பினும் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது
10 சதவீத மின்வெட்டு அதிகரிப்பு: தமிழகத்தில் மின்தேவை 12,500 மெகாவாட் ஆகும். தற்போது 8,500 மெகாவாட் மின்சாரமே கிடைக்கிறது. மின்பற்றாகுறை மின்வெட்டு மூலம் சரிசெய்யப்படுகிறது. அதன்படி மேட்டூரிலிருந்து பெறப்படும் மின்சாரம் 840 மெகாவாட் ஆகும். இது 10 சதவீதம் என கணக்கிடப்படுகிறது. நேற்று ஏற்பட்ட தீவிபத்தினால் மின்உற்பத்தி தடை ஏற்பட்டதில் கூடுதலாக 10 சதவீத மின்வெட்டு அதிகரிக்கும் என எதிர்க்கப்படுகிறது..
0 comments:
Post a Comment