Tuesday, May 29, 2012

கொலைவெறியுடன் கொளுத்தும் வெயில்... பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 7ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.

ஆனால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோரும் கவலையில் உள்ளனர். வெயில் சற்று குறைந்த பி்ன்னர் பள்ளிகளைத் திறக்கலாமே என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை நிலவுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் கூறுகையில், வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருந்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறுகி்ன்றனர்.

கடந்த ஆண்டு சமச்சீர் கல்விக் குழப்பத்தால் பள்ளிகள் மறு திறப்பு தாமதமானது. இந்த ஆண்டு வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More