Saturday, May 26, 2012

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன்-நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அ.தி.மு.க. தனது வேட்பாளரை அறிவித்துவிட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடாது என அறிவித்தது. தொடர்ந்து பா.ம.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியது. முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வும் போட்டியிடாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஐக்கிய ஜனநாயக கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட கட்சி தலைராக இருக்கும் சீனிவாசன் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More