புதுச்சேரி, புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய (ஜிப்மர்) மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.இந்நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 27-ம் தேதி வரை பெறப்பட்டன. இதில் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் அனுமதிச் சீட்டையும் ஆன்லைனில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 127 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.மே 27-ம் தேதி பெங்களூர், சண்டிகர், சென்னை, கௌஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, புதுச்சேரி, புணே, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா ஆகிய மையங்களில் நடைபெறும். தேர்வு முடிந்த ஒரு வாரத்துக்குப் பின்னர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மருத்துக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.ஆன்லைனில் அனுமதிச் சீட்டுப் பெற ஜிப்மர் இணையதளத்தைப் பார்க்கவும்.
0 comments:
Post a Comment