மதுரை ஆதீன புதிய மடாதிபதியாக நிதயானந்தா நியமிக்கப்பட்டது குறித்து ஜெயேந்திரர் தெரிவித்த கருத்துகளுக்கு, மதுரை ஆதீனமும் நித்யானந்தாவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று மதுரை ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில், புதிய ஆதீனத்தை நியமிப்பது என்னுடைய உரிமை; இதை யாரும் விமர்சிக்க முடியாது; இது குறித்த ஜெயேந்திரரின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது என்றார். உடன் இருந்த நித்யானந்தா கூறுகையில், யாரோ சொல்வதைக் கேட்டு ஜெயேந்திரர் கருத்து கூறியிருக்கிறார். ரஞ்சிதா குறித்து தெரிவித்த கருத்துக்களை அவர் 10 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். என்னைப் புரிந்து கொண்டவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள்; காசு கொடுத்து ஆதரவாளர்களைத் திரட்டும் அவசியம் எனக்கில்லை என்றார்.
0 comments:
Post a Comment