கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்
09 May 2012
திருவனந்தபுரம், மே 8: கேரளத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் பின்னணியையும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதையும் எளிதில் கண்காணிக்க கேரள போலீஸôர் முடிவு செய்துள்ளனர். பாதுகாப்பு பிரச்னைக்காக மட்டுமின்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment