டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஜப்பான் பங்கு பெற ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும் எதிர்கால திட்டங்களான மோனோ ரெயில் மற்றும் நகர போக்குவரத்து போன்ற திட்டங்களில் பங்கேற்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளது.
நகர மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் கமல்நாத், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன அதிகாரிகளை நேற்று சந்தித்து பேசினார். அப்போது டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்டத்தில் ஏற்கனவே ஜப்பான் கலந்து கொண்டு இருப்பதை குறிப்பிட்டவர், தற்போது இத்திட்டம் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளது. நான்காவது கட்ட நிலையிலும் ஜப்பான் பங்கு பெறவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதற்கு ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது.
மேலும், மூன்றாம் கட்ட நிலை முடிவடைந்ததும் அடுத்த நிலை தொடங்கப்படும். நான்காவது கட்ட நிலையில் சுமார் 440 கிலோ மீட்டர் தூரம் வரை விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரெயில் திட்டம் டெல்லி மெட்ரோ ரெயில் திட்டமாகத்தான் இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
டெல்லி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளின் கடந்த மூன்று நிலைகளிலும் ஜப்பான் பங்கு பெற்று இருந்தது. இத்திட்டத்திற்கு ஜப்பான் ரூ. 14,000 கோடி கடன் வழங்கியது. அது இத்திட்டத்தின் மொத்த அளவில் 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment