பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன்-மார்க் அய்ரால்ட் நியமிக்கபடுவதாக பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பிரான்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.
முதல் காபினெட் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தன் அமைச்சரைவையை இன்று அமைக்கிறார்.62 வயதான ஜீன்-மார்க் அய்ரால்ட் இதுவரை உயர் பதவிகளை வகித்ததில்லை, மேலும் உயர் நிலை நிர்வாக அனுபவமும் இல்லை.ஆனால் நீண்ட நாட்களாக கட்சி தலைமையுடன் தொடர்பு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 1977 ம் ஆண்டு பிரான்சின் வடமேற்கு நகரான செயின்ட் ஹீர்பிலைன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1986 ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றிவருகிறார்.
1997ம் ஆண்டு நண்டேஸ் நகரில் முனிசிபல் பிரிண்டிங் கான்ட்ராட் ஒன்று தன் கட்சிக்கு தொடர்புடைய ஒருவருக்கு ஓதிக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஆறு மாத காலம் சஸ்பென்ட் செய்யப்பட்டு 30,000 ப்ராங்க் அபதாரம் விதிக்கப்பட்டது. ஆனால் 2007 ம் ஆண்டு அதிகார பூர்வமாக இக்குற்றச்சாட்டு விலக்கிகொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment