திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை பொக்கிஷங்களை கணக்கிட மதிப்பீடு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இதன்படி பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள நிலவறைகளில் உள்ள பழங்கால விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இதனிடையே பத்மநாப சுவாமி கோவிலை சுற்றியும் அதனையொட்டியும் ரகசிய சுரங்கபாதைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கபாதைகள் திருவாங்கூர் மன்னர்கள் காலத்தில் அரண்மனையில் இருந்து கோவிலை நோக்கி செல்வதாக அமைந்துள்ளது. தற்போது இந்த சுரங்கபாதைகளில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வை தொடங்கி உள்ளனர்.
பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனைக்கு செல்லும் சுரங்கபாதை மற்றும் கோவிலின் அடியில் இருந்து வேறு கோவில்களுக்குமான இணைப்பு சுரங்க பாதை களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள தொல்பொருள் துறை ஆய்வு அதிகாரி ஜெயகுமார் தலைமையில் அதிசக்தி வாய்ந்த மின் விளக்கு வசதிகளுடன் கடந்த 3 வாரங்களாக இப்பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு குழுவினர் கூறியதாவது:-
பத்மநாபசுவாமி கோவிலின் அடிப்பகுதியில் இருந்து மன்னர் வசிக்கும் அரண்மனைக்கு செல்லும் சுரங்க பாதையில் முதலில் ஆய்வு பணி நடக்கிறது. இந்த சுரங்கபாதை மூலம் பாதாள அறைகளுக்கு கொள்ளையர்கள் யாராவது புகமுடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டது.
இதே போன்று பத்மநாபசுவாமி கோவிலுக்கும் வேறு சில கோவில்களுக்கும் இடையே இணைப்பு சுரங்கபாதைகள் உள்ளது. அவற்றிலும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.
0 comments:
Post a Comment