Saturday, June 30, 2012

Congress MLA Rumi Nath ‘Beaten Up’ by Mob For Marrying Facebook Friendஃபேஸ்புக் மூலம் 2-வது திருமணம் செய்த அசாம் பெண் எம்.எல்.ஏ.க்கு சராமரி அடி உதை

கரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
2006-ம் ஆண்டு பாரதிய ஜனதா சார்பில் போர்கோலா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் 2011-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.
ரூமிநாத், ராகேஷ் சிங் என்பவரை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 வயது மகளும் இருக்கின்றார். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த ஜாகி ஜாகிர் என்பவரை கடந்த மாதம் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார் ரூமிநாத். இதைத் தொடர்ந்து தமது மனைவியைக் காணவில்லை என்று ராகேஷ்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கரீம்கஞ்ச்சில் நேற்று இரவு ரூமிநாத் தமது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த 200க்கும் மேற்பட்டோர் இருவரையும் அடித்து துவைத்துள்ளனர்.
ரூமி நாத், தனது முதல் கணவரை விவகாரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தலைநகர் கவுகாத்தியில் ரூமிநாத்தும் அவரது இரண்டாவது கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More