Saturday, July 7, 2012

Tamilnadu all party leders wants training for Sri Lankan personnel scrapped/இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு

"மழை விட்டும் தூவானம் விடவில்லை'இலங்கையில் உச்சகட்ட போர் நடந்த போது, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்த வாசகம் இது. அதே போல், தமிழக அரசியல் களத்தில், இலங்கை பிரச்னை,

"தூவானமாய்' தொடர்ந்து எதிரொலித்து வருகிறது. சிங்கள ராணுவ வீரர்களுக்கு பயிற்சி என்ற விவகாரம் மூலம், தமிழக அரசியல் கட்சிகளிடையே, மீண்டும் இலங்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது.

நெருக்கடி :இலங்கையில் இறுதி யுத்தம் நடந்து முடிந்தபின், ஐ.நா., சபையின் மனித உரிமைக் குழுவில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஆதரித்து ஓட்டளிக்க வேண்டும் என, தமிழக கட்சிகள் ஒரு சேர வலியுறுத்தின. இந்த நெருக்கடியால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து ஒட்டளித்தது மத்திய அரசு.கடந்த சில வாரங்களுக்கு முன், இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க, "தனி ஈழத்துக்கு, தமிழகத்தில், ஆதரவு குரல் கொடுக்காதீர்கள்; மீறினால், இலங்கையில் உள்ள தமிழர்கள் அழிக்கப்படுவர்' என, எச்சரிக்கை விடுக்க, மீண்டும் தமிழக அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன.

பிரதமர் பதில்:இதற்கு பதிலளிக்கும் வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், "ரியோடி ஜெனிரோவில் நடந்த மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்தேன். அப்போது, இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்கவின் எச்சரிக்கும் பேச்சை சுட்டிக் காட்டியதோடு, தமிழர்கள் சம உரிமையுடன் வாழ, இலங்கைக்குள்ளேயே அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்' என்று பதில் அளித்துள்ளார்.அடுத்ததாய், தமிழக மீனவர்கள் விவகாரம். கடந்த ஒரு மாதத்தில், நான்கு முறைக்கு மேல், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு, ஆளாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் பிடித்து செல்லப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர், பிரதமர் மன்மோகனுக்கு கடிதங்களை எழுதினர்.

மீனவர் விடுவிப்பு:பிடிபட்டவர்களில் 13 மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்னும் சிலர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக கட்சிகள் கொடுக்கும் நெருக்கடியால், மீனவர் விஷயத்திலும், மத்திய அரசு கொஞ்சம் செயல்படத் துவங்கியுள்ளது.தொடர் வலியுறுத்தல் காரணமாக, "தமிழக மீனவர்கள் தாக்குதலைத் தடுக்க, இந்திய கடல் எல்லையில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்' என, தென் மண்டல கடலோர காவல் படை காமாண்டர் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக, இலங்கை கடற்படையினருடன், அடுத்த மாதம் பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், "காரைக்காலில் ரேடார் வசதியுடனும், கண்காணிப்பு ரோந்து விமானங்களை கொண்ட புதிய மையம் திறக்கப்பட உள்ளதாகவும்' சர்மா தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் பயிற்சி:இந்த சூழ்நிலையில், இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்.ஒட்டுமொத்தமாக எழுந்த இந்த எதிர்ப்பால், இலங்கை ராணுவ வீரர்களுக்கு, தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்தியுள்ளது. இலங்கை வீரர்களுக்கு, ராணுவ பயிற்சி அளிப்பதை, வேறு மாநிலங்களில் வைத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில், இலங்கை வீரர்களை, மத்திய அரசு திருப்பியனுப்பி உள்ளது.

ஆளுங்கட்சிக்கு வெற்றி:இலங்கை பிரச்னை தொடர்பாக, கடந்த தி.மு.க., ஆட்சியில் போராட்டங்கள், அறிக்கைகள், கடிதங்கள் என பல்வேறு வகையில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. இலங்கை விவகாரத்தில், பட்டும் படாமல் ஒதுங்கி வந்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது தீவிர ஆர்வம் காட்டுவதால்தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்கிறது ஆளுங்கட்சி வட்டாரம்.போரில் வீடுகளை இழந்த தமிழர்களுக்கு, மறு குடியமர்த்தல், இலங்கை குடிமகனாக வாழ, சரிநிகர் சம அந்தஸ்து ஆகியவற்றை அளிக்க, இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்; அதற்காக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே போல், தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்திலும், மத்திய அரசை, வலுவாக நிர்பந்திக்க முயற்சி எடுக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.


இலங்கை வீரர்கள் ஒன்பது பேருக்கு, சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில், பயிற்சி அளிக்கப்படுகிறது. "தமிழர்களை கொன்று குவிக்க, தமிழகத்திலேயே பயிற்சி அளிப்பதா என, ஆளும் கட்சியான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., தமிழக காங்கிரஸ் என, அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்பு 

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More