இந்தியாவில் கழிப்பிடங்கள் அமைக்க கூடுதலான நிதி ஒதுக்கீடுகள் தேவை என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
வெளியிடங்களில் மலசலம் கழிக்கும் இடங்களின் தலைநகராக இந்தியா விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் வெளியிடங்களில் மலசலம் கழிக்கப்படுவதில் அறுபது சதவீதம் இந்தியாவில் இடம்பெறுகிறது என்பது ஒரு பெரும் வெட்கக்கேடு என்று இந்தியாவின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
எங்கும்...எல்லாம் என்கிற நிலை இந்தியாவில்.
இந்தியாவில் பரந்து விரிந்து கிடக்கும் ரயில்வே பாதைகளே உலகின் மிகப்பெரும் கழிப்பிடமாக உள்ளது என்று தெரிவித்துள்ள அவர், அவற்றை சுத்தம் செய்ய பல மில்லியன் டாலர்கள் செலவாகும் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.
இந்தியா ஒரு போர் விமானம் வாங்க செலவாகும் நிதியை வைத்துக் கொண்டு, ஆயிரம் கிராமங்கள் வெளியிடங்களில் மலசலம் கழிப்பதை நிறுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 comments:
எங்கும்...எல்லாம் என்கிற நிலை இந்தியாவில்.
காரணம், இவர்கள் தான்.
அரசு என்பது மக்களின் சேவைக்கு தான் உருவக்கபட்டது. தற்போது எந்த கட்சி ஆட்சி அமைந்தாலும் மக்கள் பணத்தை கஜானாவுக்கு எப்படி கொண்டுவந்து தன் கட்சி பணிக்கு செலவு செய்வது என்றும் தன் கட்சிக்கு எப்படி பெயர் எடுப்பது என்று தான் சிந்திக்கின்றனர்.
இந்த நிலை மாறினால் ?....
விலைவாசி குறையும் தங்களுடைய சிறு சிறு தேவையை அவர்களே நிறைவேற்றி கொள்வார்கள்.
அரசு தன் பாதையை சரியாய் தேர்ந்ததேடுதால் போதும்.
இப்படிக்கு
இந்திய குடிமகன்
Post a Comment