பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் தங்களை பணியமர்த்தக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 180 பேர் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்கள் அரசாணை 86-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதுபோல், கரூர் உழவர் சந்தை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 50 மக்கள் நலப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். நெல்லை ஜங்ஷன் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். மேலும், தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர், நாகை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நலப் பணியாளர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பின்னர் தமிழக அரசின் மேல்முறையீட்டை தொடர்ந்து, மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தது.
0 comments:
Post a Comment