Monday, April 9, 2012

அகவிலைப்படி 7 சதவிகிதம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவிகிதம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி பெறுவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன் வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் அகவிலைப்படி உயர்வு மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் 1300 கோடி ரூபாய் செலவாகும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More