Wednesday, April 25, 2012

நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.


தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் சத்திரமடை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயி அவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மேலும், லாடபுரத்தைச் சேர்ந்த வசந்தா என்ற பெண்மணி வீட்டில் இருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதே போன்று சேலம் மாவட்டத்திலும் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியிலும் நேற்று மாலை திடீரென கோடை மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகரில் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை நீடித்தது. அந்த மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், பழனி உட்பட சில பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதே போல் சேலம், பெரம்பலூர், தேனி, கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்டங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More