Wednesday, April 25, 2012

தபால்துறை நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது

தபால்துறை தற்போது பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக பயன்படக்கூடிய நவீன சோலார் விளக்குகள் விற்பனையிலும் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. நாள் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து இரவ� முழுவதும் இந்த விளக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். தனியார் நிறுவனத்துடன் கூட்டாக இந்த திட்டத்தை தபால்துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3 வகையான சோலார் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் டி.லைட் எஸ் 250 என்ற மாடல் விலை ரூ.1,699 ஆகும். இது சி.எல்.எப். பல்புகளை காட்டிலும் அதிக வெளிச்சம் கொண் டது. 50 ஆயிரம் மணி நேரம் எரியும். 12 மாதம் உத்தரவாதம் உள்ளது. இதில் செல்போனையும் 1.3 வாட் திறன் கொண்ட சோலார் தகடையும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். டி.லைட் எஸ் 10 மாடல� விளக்கு ரூ.549 ஆகும். இது உறுதியான பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது எளிதில் உடையாது. டி.லைட் எஸ் 1 மாடல் விளக்கின் விலை ரூ.399 ஆகும். இதற்கு 6 மாதம் உத்தரவாதம் உள்ளது. இந்த சோலார் விளக்கு கள் தற்போது வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தலைமை தபால் நிலையங்கள், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், திருப்போரூர் கருங்குழி, உத்திரமேரூர், பெரிய காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, லத்தேரி, ஒடுகத்தூர், அணை� ��்கட்டு, கனியம்பாடி, சத்துவாச்சாரி ஆகிய துணை தபால் நிலையங்கள் என 19 தபால் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய தபால் நிலையங்க ளிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சியை தபால் துறை எடுத்து வருகிறது. இந்த தகவலை சென்னை தலைமை அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.


தமிழகத்தின் சில மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இடிதாக்கி 3 பேர் உயிரிழந்தனர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் சத்திரமடை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற விவசாயி அவரது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மின்னல் தாக்கியதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். மேலும், லாடபுரத்தைச் சேர்ந்த வசந்தா என்ற பெண்மணி வீட்டில் இருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதே போன்று சேலம் மாவட்டத்திலும் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருச்சியிலும் நேற்று மாலை திடீரென கோடை மழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகரில் மாலை 4 மணிக்கு தொடங்கிய மழை 7 மணி வரை நீடித்தது. அந்த மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், பழனி உட்பட சில பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதே போல் சேலம், பெரம்பலூர், தேனி, கிருஷ்ணகிரி உட்பட சில மாவட்டங்களில் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More