Thursday, May 31, 2012

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அக் கட்சியின் எம்பி கனிமொழிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, கடந்த ஆண்டு மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 6 மாதத்திற்கு பின்னர் அவருக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. டெல்லியிலிருந்து

வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, கனிமொழி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஓ.பி.ஷைனி, சென்னைக்கு செல்ல கனிமொழிக்கு அனுமதி வழங்கினார். மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்தும் கனிமொழிக்கு விலக்கு அளித்தார்.

ரூ.28 லட்சத்துக்கு புது பைக் வாங்கினார் டோனி: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் டோனி.
 
இதன்மூலம் தென் கிழக்கு ஆசியாவிலேயே, இந்த 'புயல் வேக' பைக்கை வாங்கியுள்ள முதல் நபர் என்ற பெருமை பெறுகிறார் டோனி. விளையாட்டு வீரர்களில், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் பெக்காமிடம் இந்த வகை பைக் உள்ளது.
 
புதிய பைக் குறித்து டோனியின் உறவினர் கவுதம் குப்தா கூறுகையில், 'ஐ.பி.எல்., தொடரின் துவக்கத்தில் டோனி 'ஹெல்கேட்' பைக்கை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்தார். இந்த பைக்கை ராஞ்சிக்கு எடுத்து வருவதற்காக தற்போது டில்லி சென்றுள்ளார் டோனி. மிக விரைவில் பைக்குடன் டோனி ராஞ்சி திரும்ப உள்ளார்' என்றார். 

Tuesday, May 29, 2012

டிக்கெட் விற்று ரூ. 180 கோடி வசூலித்த ஐபிஎல்!

டெல்லி: 5வது ஐபிஎல் போட்டித் தொடரில் டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ. 180 கோடி பணம் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். தொலைக்காட்சி மூலம் இந்தப் போட்டிகளை 16 கோடி பேர் பார்த்துள்ளனராம்.

கிரிக்கெட் என்றால் பணம், இந்திய கிரிக்கெட் என்றால் கோடானு கோடி பணம், அதிலும் ஐபிஎல் என்றால் பண மழை என்றாகி விட்டது. உலகமே பார்த்துப பொறாமைப்படும் அளவுக்கு கரன்சி மழையில் புரண்டு கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட்.

நடந்து முடிந்த 5வது ஐபிஎல் தொடரிலும் தாறுமாறாக வசூல் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். குறிப்பாக டிக்கெட் விற்பனை மூலம் ரூ. 180 கோடி பணத்தைப் பார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

பல சர்ச்சைகளையும் பார்க்கத் தவறவி்ல்லை ஐந்தாவது ஐபிஎல் தொடர். ஆனால் இதனால் ஐபிஎல்லுக்கு வர வேண்டிய வருவாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லையாம். காரணம், கிரிக்கெட் மீதான மக்களின் மோகம் அந்த அளவுக்கு இருப்பதால்.

டிவி ஒளிபரப்பு மூலம் 16 கோடி பேர் ஐபிஎல் போட்டிகளைப் பார்த்துள்ளனர். மேலும் ரூ. 180 கோடி அளவுக்கு டிக்கெட் விற்பனையாகியுள்ளது.

கொலைவெறியுடன் கொளுத்தும் வெயில்... பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?

சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 7ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.

ஆனால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோரும் கவலையில் உள்ளனர். வெயில் சற்று குறைந்த பி்ன்னர் பள்ளிகளைத் திறக்கலாமே என்று பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை நிலவுகிறது.

இதுகுறித்து கல்வித்துறை வட்டாரத்தில் கூறுகையில், வெயிலின் உக்கிரம் மிக அதிகமாக இருந்தால் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்று கூறுகி்ன்றனர்.

கடந்த ஆண்டு சமச்சீர் கல்விக் குழப்பத்தால் பள்ளிகள் மறு திறப்பு தாமதமானது. இந்த ஆண்டு வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Saturday, May 26, 2012

அரிசியில் கவனம்

அரிசியில் கவனம்

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு களின்படி, நாள்தோறும் ஒரு கப் வெள்ளை அரிசி சாதம் உண்பவர்களுக்கு "டைப்-2' சர்க்கரை நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என தெரியவந்துள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகளும் இதனைத் தெரிவிக்கின்றன. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள் மிக முக்கிய உணவாக, அரிசி உணவையே நாள் தோறும் உண்கின்றனர். எனவே அவர்கள் இந்த ஆராய்ச்சி முடிவை கவனத்தில் கொள்ள வேண்டும். பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் அதிக அளவில் கிலைசிமிக்ஸ் இன்டக்ஸ் உள்ளது. அதில் எந்த சத்துகளும் இல்லாமல் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவே அது உடனடியாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. எனவே தற்போது "டபுள் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி' என வரும் விளம்பரங்களின் மீது நுகர்வோர் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) வேட்பாளர் சீனிவாசன்-நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. முத்துக்குமரன் கார் விபத்தில் மரணம் அடைந்ததையொட்டி அங்கு வருகிற ஜுன் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து இருந்ததால் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே அ.தி.மு.க. தனது வேட்பாளரை அறிவித்துவிட்டதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடாது என அறிவித்தது. தொடர்ந்து பா.ம.க.வும் தேர்தலை புறக்கணிப்பதாக கூறியது. முக்கிய எதிர்க் கட்சியான தி.மு.க.வும் போட்டியிடாது என அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று ஐக்கிய ஜனநாயக கட்சி தனது வேட்பாளரை அறிவித்தது. புதுக்கோட்டை மாவட்ட கட்சி தலைராக இருக்கும் சீனிவாசன் இந்த இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அக்கட்சியின் நிறுவனர் பச்சைமுத்து திருச்சியில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

Thursday, May 24, 2012

கியாஸ், டீசல் விலையும் உயர்கிறது?: மத்திய அரசு நாளை முடிவு

புதுடெல்லி, மே. 24-

பெட்ரோல் விலை உயர்வு வரலாறு காணாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையையும் உயர்த்தும் படி இந்திய எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 மற்றும் சமையல் கியாஸ் விலையை சிலிண்டருக்கு ரூ. 50 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால்தான் இழப்பை முழுமையாக சமாளிக்க முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் கூறுகின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுக்க மத்திய மந்திரிகளின் உயர்மட்டக் குழு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்தா விட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க உள்ளனர். டீசல் விலையை மத்திய அரசு சற்று உயர்த்தக் கூடும் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More