Friday, May 18, 2012

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக கேஸ்: இந்தியா விரைவில் ஒப்பந்தம்

துருக்மேனிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு வரும் திட்டத்துக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இந்தியாவில் எரிசக்தி பற்றாக்குறையை சமாளிக்க, ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் கேஸ் கொண்டு திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தின. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. Ôஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச சட்டதிட்டங்களை மதிக்கவில்லை. அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்ய கூடாது. மேலும், தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் உள்ளதுÕ என்று அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், துருக்மேனிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கேஸ் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் கேஸ் கொண்டு வர பைப் லைன் அமைக்கும் திட்டத்துக்கு இந்திய கேபினட் ஒப்புதல் வழங்கி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பிராந்திய அளவில் உறவு மேம்படும் என்று அமெரிக்க உள்துறை தெரிவித்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தில் மே 23 அல்லது 24ம் தேதி இந்தியாவின் கெய்ல் நிறுவனமும் துருக்மேனிஸ்தானின் தேசிய ஆயில் நிறுவனம் டர்னெனும் கையெழுத்திட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் படி, துருக்மேனிஸ்தானின் தென் பகுதியில் உள்ள கல்கிநிஷ் ஆயில் கிணற்றில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தகார், பாகிஸ்தானின் முல்தான் நகர் வழியாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பஸில்கா என்ற பகுதிக்கு குழாய் மூலம் கேஸ் கொண்டு வரப்படும். இதற்காக 1,680 கி.மீ. தூரத்துக்கு குழாய் அமைக்கப்படும். குழாய் மூலம் கொண்டு வரப்படும் கேஸை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பகிர்ந்து கொள்ளும்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More