Saturday, June 30, 2012

Congress MLA Rumi Nath ‘Beaten Up’ by Mob For Marrying Facebook Friendஃபேஸ்புக் மூலம் 2-வது திருமணம் செய்த அசாம் பெண் எம்.எல்.ஏ.க்கு சராமரி அடி உதை

கரீம்கஞ்ச்: அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் பெண் எம்எல்ஏ ரூமி நாத் மற்றும் அவரது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிர் ஆகியோர் மர்ம கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
2006-ம் ஆண்டு பாரதிய ஜனதா சார்பில் போர்கோலா தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த அவர் 2011-ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.
ரூமிநாத், ராகேஷ் சிங் என்பவரை முதலாவதாக திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 வயது மகளும் இருக்கின்றார். இந்நிலையில் ஃபேஸ்புக் மூலம் கிடைத்த ஜாகி ஜாகிர் என்பவரை கடந்த மாதம் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டார் ரூமிநாத். இதைத் தொடர்ந்து தமது மனைவியைக் காணவில்லை என்று ராகேஷ்சிங் போலீஸில் புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கரீம்கஞ்ச்சில் நேற்று இரவு ரூமிநாத் தமது இரண்டாவது கணவர் ஜாகி ஜாகிருடன் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது அங்கு வந்த 200க்கும் மேற்பட்டோர் இருவரையும் அடித்து துவைத்துள்ளனர்.
ரூமி நாத், தனது முதல் கணவரை விவகாரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தலைநகர் கவுகாத்தியில் ரூமிநாத்தும் அவரது இரண்டாவது கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Reservation of Tatkal Train bookings to start at 10am from July 10-தட்கல்' டிக்கெட் முன்பதிவு ஜூலை 10ஆ‌ம் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே ‌நி‌ர்வாக‌ம்

தட்கல்' டிக்கெட் முன்பதிவு ஜூலை 10ஆ‌ம் தேதி முதல் காலை 8 மணிக்குப் பதிலாக, 10 மணிக்கு தொடங்கும் என்று ரெயில்வே ‌நி‌ர்வாக‌ம் அறிவித்துள்ளது.

‌‌தீபாவ‌ளி, ‌கி‌றி‌ஸ்ம‌ஸ், பொ‌ங்க‌ல் உ‌ள்‌ளி‌ட்ட மு‌க்‌‌கிய ப‌ண்டிகை கால‌ங்க‌ளி‌ல் இர‌யி‌ல்க‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்வத‌ற்காக டி‌க்கெ‌ட் கவு‌ண்ட‌ர்களு‌க்கு செ‌ன்றா‌ல் 10 ‌நி‌மிட‌ங்க‌ளி‌ல் அனை‌த்து ‌டி‌க்கெ‌ட்டுகளு‌ம் ‌வி‌ற்று ‌தீ‌ர்‌ந்து ‌விடு‌கி‌‌ன்றன. இதனா‌ல் பல‌ர் 'த‌ட்க‌ல்' டி‌க்கெ‌ட் வா‌ங்க ஏஜெ‌ன்டுகளை ந‌ம்‌பி இரு‌க்‌கி‌ன்றன‌ர். இதுதா‌ன் ச‌ந்த‌ர்‌ப்ப‌ம் எ‌ன்று கரு‌தி ஏஜெ‌ன்டுக‌ள் 300 ரூபா‌ய் டி‌க்கெ‌ட்டை 1500 ரூபா‌‌‌ய் முத‌ல் 2000 ரூபா‌ய் வரை ‌வி‌ற்பனை செ‌ய்‌கிறா‌ர்க‌ள்.

மேலு‌ம், அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களும், முன்பதிவில் டிக்கெட் கிடைக்காதவர்களும் தாங்கள் பயணம் செய்வதற்குரிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக `தட்கல்' முறையில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த தட்கல் முன்பதிவுக்காக பயணிகள் அதிகாலையிலேயே ரெயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்து இருக்க வேண்டியது உள்ளது.

இந்த தட்கல் முன்பதிவில் பலர் முறைகேடாக டிக்கெட் பெற்று கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று, கடும் லாபம் சம்பாதிக்கிறார்கள். இது தவிர, தட்கல் முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் ரெயில்வே நிர்வாகத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும் தட்கல் முன்பதிவு நேரத்தை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி, இனிமேல் காலை 8 மணிக்குப் பதில் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும்.

ூலை 10ஆ‌ம் தேதி முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி. போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு செய்ய முடியாது. பகல் 12 மணி முதல்தான் அவர்கள் தட்கல் முன்பதிவுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில், தட்கல் முன்பதிவுக்கு தனியாக கவுண்ட்டர் திறக்கப்படும். அந்த கவுண்ட்டரில், டிக்கெட் எடுப்பவர்களை கண்காணிக்க ரகசிய கேமராவும் பொருத்தப்படும். தட்கல் முன்பதிவு கவுண்ட்டரில் பணியாற்றச் செல்லும் ஊழியர்கள், `செல்போன்' கொண்டு செல்ல தடை விதிக்கப்படு‌ம்.

இந்த புதிய முறைகள் ஆகியவை எப்போது முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட வில்லை. ஆனால், விரைவில் அமலுக்கு வரும் என்று ரெயில்வே அறிவித்து உள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 677 ரெயில்களுக்கு தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. கடந்த ஆண்டு (2011-12) மட்டும் தட்கல் முன்பதிவு மூலம் ரெயில்வேக்கு ரூ.847 கோடி வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Wednesday, June 27, 2012

Pranab Mukherjee's last day as Finance Minister-பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற சற்றே இறுக்கமான நாளாக

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை...

நிதியமைச்சராக 3 முறை இருந்தவர் பிரணாப் முகர்ஜி. 1977ம் ஆண்டு அவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது அவரது அமைச்சர் பதவியும் போனது. பின்னர் 1984ம் ஆண்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். அதன் பின்னர் 28 ஆண்டுகள் கழித்து மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார் பிரணாப்.

நேற்று மாலை 4.30 மணியளவில் கடைசி முறையாக நார்த் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்தை விட்டு வெளியேறினார் பிரணாப். இனிமேல் அவர் நார்த் பிளாக்குக்கு வர மாட்டார் என்ற நினைவே அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது. அதை செய்தியாளர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டார் பிரணாப்.

செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி உணர்ச்சி பொங்க பேசியதிலிருந்து சில பகுதிகள்...

உங்களிடம் நிறைய கேள்விகள் இருக்கும். ஆனால் ஒரு அமைச்சராக கடைசி நாளில் நான் இங்கு நிற்கிறேன்.எனவே நிறைய பேச முடியாது, நேரமில்லை.

நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் இந்த தருணத்தில், நெஞ்சம் நிறைந்த, மறக்க முடியாத நினைவுகளுடன் நான் இங்கிருந்து செல்கிறேன்.

இத்தனை ஆண்டுகள் பதவி வகித்த இந்த காலத்தில் நான் எடுத்த அத்தனை முடிவுகளுமே சரியானதுதான் என்று கூற மாட்டேன். அதேசமயம், நான் எந்த முடிவை எடுத்தாலும், அதை நான் சிறு வயது முதலே பார்த்துக் கொண்டிருக்கும் ஏழைகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களை மனதில் கொண்டுதான் எடுத்தேன்.

எனது வாழ்க்கையில், நான் நீண்ட தூரம் வந்து விட்டேன். இருந்தாலும், எந்த உயரத்திற்குப் போனாலும், மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன் என்ற உணர்வு மட்டும் என்றுமே என்னை விட்டுப் போனதில்லை. எனக்கு நானே அதை அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

எனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா, சிபிஎம், பார்வர்ட் பிளாக் என அத்தனை கட்சிகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் பிரணாப்.

இத்தனை ஆண்டு கால அரசியல்வாழ்க்கையில் பத்திரிக்கையாளர்கள் உங்களிடம் பழகிய விதம், அவர்களுடனான உங்களது அனுபவம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, தனது பாணியில், இனிமேல் காரில் ஏறப் போகும்போது வழிமறித்து கேள்வி கேட்பது, அமைச்சகத்திலிருந்து வெளியே வரும்போது கேள்வி கேட்பது ஆகியவை இருக்காது... என்றார் சிரித்தபடி.

நேற்று தனது கடைசி அரசியல் நாள் என்பதால் காலையிலேயே எழுந்து வழக்கமான பூஜையை முடித்து விட்டு அலுவலகத்திற்கு வந்தார் பிரணாப். கடைசி நாளிலும் அவர் சில கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டார். பின்னர் தனது துறை அதிகாரிகளைச் சந்தித்தார். அனைவருக்கும் குட்பை சொன்னார். பின்னர் அலுவலகத்திலேயே, வழக்கமான தனது பிற்பகல் தூக்கத்தை போட்டார். அதன் பிறகு மாலை 4.30 மணியளவில் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

அங்கு லைனாக நின்றிருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் கடைசி முறையாக வணக்கம் சொல்லி விடை பெற்றார். பின்னர் பத்திரிக்கையாளர்களும் பிரணாப்பிடம் சென்று விடை பெற்றனர். அப்போது பல பத்திரிக்கையாளர்கள் தங்களது செல்போன் கேமராக்களில் பிரணாப் முகர்ஜியை வளைத்து வளைத்துப் படம் பிடித்தனர். அதைப் பார்த்த பிரணாப், இப்போதெல்லாம் படம் எடுக்கிறது ரொம்ப ஈசியாப் போச்சுல்ல என்றார் சிரித்த்படி.

நேற்றைய நாளில் ஒரு முக்கிய விஐபி திடீரென பிரணாப்பை சந்திக்க வந்தார். அவர் ராகுல் காந்தி. பிற்பகல் 1.30 மணியளவில் வந்த ராகுல், 3.30 மணி வரை பிரணாப்புடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ராகுல் காந்தியிடம் அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் தான் இணைந்து பணியாற்றிய அந்தக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாராம் பிரணாப்.

எப்போதும் டென்ஷனாகவே காணப்படும் பிரணாப் முகர்ஜிக்கு நேற்றைய நாள் சற்றே இறுக்கமான நாளாக மாறி விட்டது. கடைசி முறையாக அரசியலிலிருந்தும், அமைச்சர் பதவியிலிருந்தும் விடை பெற்ற நேற்றைய நாளை மிகவும் உணர்ச்சிகரமாக முடித்து புதிய அத்தியாயத்தை நாளை தொடங்கப் போகிறார் பிரணாப் முகர்ஜி.

Saturday, June 23, 2012

Montek Singh Ahluwalia justifies toilets upgrade for Rs 35 lakh-கடனும் கழிப்பறையும்

கடனும் கழிப்பறையும்!

'என் தற்கொலைக்குக் காரணம், கரும்பு விவசாயத்துக்காக நான் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடன்தான்'
-இப்படி முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கரும்பு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு, உயிரை விட்டிருக்கிறார்... நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை, மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது விவசாயி முருகையன்!
தமிழக கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு, சமீபத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக, உரிய காலத்தில் கரும்புகள் அறுவடை செய்யப்படாததால்... காய்ந்து வீணாகிப் போயின. 'அறுவடை செய்து கடனைக் கட்டலாம்' என்று காத்திருந்த விவசாயிகள், இதன் காரணமாக கடனாளிகளாக மாறிப் போனார்கள். அவர்களில் ஒருவர்தான், இந்த முருகையன்!
கரும்பு விவசாயிதான் என்றில்லை... 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடனைக்கூட கட்டமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் நெல் விவசாயி, கோதுமை விவசாயி... என்று தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்தபடிதான் இருக்கிறது.
இப்படிப்பட்ட நாட்டில்தான்... டெல்லியில் உள்ள திட்டகமிஷன் தலைமை அலுவலகத்தில்
2 கழிப்பறைகளை 35 லட்ச ரூபாய் செலவில் சீரமைத்திருக்கிறார்கள். 'இதற்காக இவ்வளவு செலவிட வேண்டுமா?' என்று கேள்வி எழ, அதை நியாயப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்கிறார் திட்டக் கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா.
கழிப்பறைக்கு இப்படி வாரி இறைக்கும் லட்சங்களை வைத்தே... எத்தனையோ விவசாயிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமே! ஒருவேளை, 'இந்தியா விவசாய நாடு' என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்க... 'தற்கொலைகள் தொடரட்டும்' என்று முடிவெடுத்து விட்டார்களோ... ஆட்சியாளர்கள்!
வாழ்க்கை முழுக்க ரத்தம் சிந்தும் விவசாயி, துளி சுகமும் காணாமல் அந்த மண்ணுக்குள்ளேயே போய் கொண்டிருக்க... துளி அழுக்கோ, சிறு வியர்வைக் கசகசப்போ தாங்கள் புழங்கும் கழிப்பறைக்குள்கூட வந்துவிடக் கூடாது என்பதற்காக லட்சங்களை இவர்கள் கொட்டிக் கொண்டிருக்க... நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயக விதிமுறையோ?!
http://ibnlive.in.com/news/montek-justifies-toilets-upgrade-for-rs-35-lakh/264631-3.html 

Thursday, June 21, 2012

இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

ரியோ-டி-ஜெனிரோ, ஜூன் 21-

மெக்சிகோவில் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலில் நடக்க இருக்கும்  ‘ரியோ பிளஸ் 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ரியோடி ஜெனிரோ சென்றார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு ஆகியவை குறித்து இதில் பங்கேற்கும் பல நாட்டுத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதனிடையே இன்று மன்மோகன் சிங் சீன பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரு நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படும் பாஸ்மதி அரிசியை சீனாவுக்கு இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை 2006-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்துக்கு சீன பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Friday, June 8, 2012

பத்மநாபசுவாமி கோவில் சுரங்க பாதைகளில் ஆய்வு:கொள்ளையர்கள் நுழைய வாய்ப்பா?

 
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் உள்ள பாதாள அறை பொக்கிஷங்களை கணக்கிட மதிப்பீடு குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. இதன்படி பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள 6 பாதாள நிலவறைகளில் உள்ள பழங்கால விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
 
இதனிடையே பத்மநாப சுவாமி கோவிலை சுற்றியும் அதனையொட்டியும் ரகசிய சுரங்கபாதைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சுரங்கபாதைகள் திருவாங்கூர் மன்னர்கள் காலத்தில் அரண்மனையில் இருந்து கோவிலை நோக்கி செல்வதாக அமைந்துள்ளது. தற்போது இந்த சுரங்கபாதைகளில் மதிப்பீட்டு குழுவினர் ஆய்வை தொடங்கி உள்ளனர்.
 
பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து திருவனந்தபுரம் கவுடியார் அரண்மனைக்கு செல்லும் சுரங்கபாதை மற்றும் கோவிலின் அடியில் இருந்து வேறு கோவில்களுக்குமான இணைப்பு சுரங்க பாதை களிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
கேரள தொல்பொருள் துறை ஆய்வு அதிகாரி ஜெயகுமார் தலைமையில் அதிசக்தி வாய்ந்த மின் விளக்கு வசதிகளுடன் கடந்த 3 வாரங்களாக இப்பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆய்வு குழுவினர் கூறியதாவது:-
 
பத்மநாபசுவாமி கோவிலின் அடிப்பகுதியில் இருந்து மன்னர் வசிக்கும் அரண்மனைக்கு செல்லும் சுரங்க பாதையில் முதலில் ஆய்வு பணி நடக்கிறது. இந்த சுரங்கபாதை மூலம் பாதாள அறைகளுக்கு கொள்ளையர்கள் யாராவது புகமுடியுமா? என்பது குறித்து ஆராயப்பட்டது.
 
இதே போன்று பத்மநாபசுவாமி கோவிலுக்கும் வேறு சில கோவில்களுக்கும் இடையே இணைப்பு சுரங்கபாதைகள் உள்ளது. அவற்றிலும் ஆய்வு நடந்து வருகிறது என்றனர்.

Thursday, June 7, 2012

நாட்டின் முதலாவது "பேசும் ஏடிஎம்'

ஆமதாபாத், ஜூன். 7: பார்வையற்றோருக்கான முதலாவது "பேசும் ஏடிஎம்' இயந்திரம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.  யூனியன் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இந்த பேசும் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.சர்கார் அதைத் திறந்து வைத்தார்.  இந்த ஏடிஎம் இயந்திரத்தில் "ஹெட்ஃபோன்' பொருத்தவதற்கான வசதி இருக்கிறது. இந்த ஹெட்போன் மூலம் வழிகாட்டும் ஒலிக்குறிப்புகளைக் கேட்க முடியும்.  அதைப் பின்பற்றி பார்வையற்றவர்கள் ஏடிஎம் இயந்திரத்தைத் தடையில்லாமல் பயன்படுத்த முடியும்.  சக்கர நாற்காலியில் வரும் மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் இந்த பேசும் ஏடிஎம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் இதைப் பயன்படுத்தலாம்.

Friday, June 1, 2012

ஆனந்துக்கு ரூ.2 கோடி: முதல்வர்

சென்னை, ஜூன் 1: உலக செஸ் போட்டியில் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துக்கு ரூ.2 கோடி பரிசுத் தொகை அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது முறையாக ஆனந்த் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், ஆனந்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More