Saturday, December 3, 2022

SRMIST- UBA தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் கீழ் பொத்தேரி ஏரி கரையோர சாலைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கம்

 SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, காட்டாங்குளத்தூர் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA-SRM IST)  NCC மற்றும் யுனிவர்சல் மனித மதிப்புகள் (UHV) உடன் இணைந்து " பொக்கிஷத்தை குப்பையில் போடாதே" என்ற கருப்பொருளுடன்  தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் கீழ் இன்று   (டிசம்பர் 03, 2022)  காலை 6 மணிக்கு பொத்தேரி ஏரி கரையோர சாலைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.


டாக்டர்.வ.திருமுருகன் (இணை இயக்குனர் (சிஎல்) மற்றும் நோடல் அதிகாரி (யுபிஏ-எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) இந்த நடவடிக்கைக்கு பங்கேற்பாளர்களை வரவேற்றார்.  நிகழ்வை டாக்டர் எம்.வைரமணி (டீன்-பயோ இன்ஜினியரிங்) துவக்கி வைத்தார். நாட்டின் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மகாத்மா காந்திஜியின் தொலைநோக்கு பார்வையை அவர் முன்வைத்தார்.நாட்டின் குடிமகனாக தெருக்களையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார் .


டாக்டர்.பி.சுப்ரஜா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் -யுஎச்வி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரைகளையும்  பங்கேற்பாளர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கினார்.  


பொத்தேரி ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதை , சாலைகள் தூய்மை செய்யும் இந்த இயக்கத்தில்  மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சேகரிக்கப்பட்ட கழிவுகளின்  மொத்த எடை 361 கிலோவாகும்.


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More