Thursday, June 21, 2012

இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய சீனா ஒப்புதல்

ரியோ-டி-ஜெனிரோ, ஜூன் 21-

மெக்சிகோவில் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பிரேசிலில் நடக்க இருக்கும்  ‘ரியோ பிளஸ் 20’ மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று ரியோடி ஜெனிரோ சென்றார்.

இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு ஆகியவை குறித்து இதில் பங்கேற்கும் பல நாட்டுத் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இதனிடையே இன்று மன்மோகன் சிங் சீன பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து பேசினார். 40 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் இரு நாட்டு ராணுவம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படும் பாஸ்மதி அரிசியை சீனாவுக்கு இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை 2006-ல் தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய சீன அதிபர் ஹூ ஜிண்டாவ் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுடனான இந்த ஒப்பந்தத்துக்கு சீன பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே ராணுவ பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைத்து போவது என்றும், 2015-ம் ஆண்டில் மற்றும் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தக நடக்கும் ஒப்பந்தம் செய்து கொள்வது என்றும் பேசி ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More