கிராம ஊராட்சிகளின் சட்டரீதியான கடமைகள்/Statutory Duties of Village Panchayats
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110-ன் படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளுதல் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளாகும்.
அனைத்து கிராமச் சாலைகள்,
பாலங்கள்,
சிறுபாலங்கள்,
தடுப்புச்சுவர்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைத்தல்,
பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் (நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் தவிர)
குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல்.
கழிவு நீர்க் கால்வாய் அமைத்துக் கழிவுநீரை வெளியேற்றுதல்.
தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டின் மூலமாக சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்துதல்
இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளை ஏற்படுத்திப் பராமரித்தல்
குடிநீர் வழங்குதல்
சமுதாய சொத்துக்களை பராமரித்தல்
கிணறுகள் தோண்டுதல் மற்றும் பராமரித்தல் மற்றும்
குளம் தோண்டுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்.
அவ்வப்போது அரசு அறிவிக்கை வாயிலாகப் பணிக்கக்கூடிய பிற கடமைகள்.
0 comments:
Post a Comment