சென்னை பல்கலைக்கழகத்தின் நிலங்களை புதிய பாடத்திட்டம் பிளண்டட இளங்கலை பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மாணவரகள் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் போதே ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு. மாணவ மாணவியருக்கு ஆய்வுக்கூட வசதிகள் கிண்டி வளாகத்தில் உள்ள பல்வேறு அறிவியல் துறைகள் ஒருங்கிணைந்து இந்த வசதியை வழங்க முன் வைத்திருக்கின்றனர். உயர்ந்த தரம் நல்ல வசதி குறைந்த கட்டணம் ஆகியவை இளங்கலை பட்டப்படிப்பு உள்ளது என்பது கல்வியாளர்களின் கருத்து.மெல்போர்ன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பாடம் நடத்துவார்கள்.அவரகளுடன் இணைந்து தயாரிக்க பட்ட பாடங்கள் நடத்தப்படுகின்றன என்பதால் இந்தப் பட்டப் படிப்பு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப் படுகிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர முடியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள நம் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பு கொடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஒரு விதத்தில் வரப்பிரசாதம். 184 பேர் விண்ணப்பித்துள்ளனர் அவர்களின் தகுதி அடிப்படையில் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவரை 18 மாணவர்கள் சேர்த்துள்ளதாகவும் வரும் நாட்களில் இதன் முக்கியத்துவம் கருதி மேலும் பலர் சேர வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் அளிக்கிறது அரிய சந்தர்ப்பம் பிளஸ் டூ முடித்தவர்கள் வரவேண்டும் சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை பாடத்திட்டம் பிளண்டட படிக்க.
0 comments:
Post a Comment