பாஸ்டன்: ஹார்வர்டு பல்கலைக் கழக வரலாற்றில் இதுவரை யாரும் தராத அளவுக்கு ரூ 220.6 கோடியை நன்கொடையாக அளித்துள்ளது டாடா குழுமம்.
வெளிநாடுகள் மூலம் இந்த அளவு பெரும் தொகையை இப்போதுதான் முதல்முறையாகப் பெறுகிறது ஹார்வர்ட்.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் தரமான கல்விக்குப் புகழ்பெற்றது. 102 ஆண்டு பழமைமிக்கது.
இந்த நிறுவனத்துக்கு சில தினங்களுக்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திரா குழும துணைத் தலைவர் ஆனந்த் மகிந்திரா 10 மில்லியன் டாலர் (ரூ 44.1 கோடி) நன்கொடையை வழங்கினார். தனது தாயார் இந்திரா மகிந்திராவின் நினைவாக அவர் இதனை வழங்கினார். இது மிகப்பெரி்ய நன்கொடையாக அப்போது பார்க்கப்பட்டது.
இப்போது டாடா குழுமத்தின் சர் தோரப்ஜி டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை மூலம் 50 மில்லியன் டாலர் (ரூ 220.6 கோடி) நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கல்வி மையம் மற்றும் குடியிருப்பு கட்டடம் கட்ட இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடாவுக்கும் ஹார்வர்டு பல்கலைக் கழகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 1975-ம் ஆண்டு இந்த பல்கலைக் கழகத்தின் ஸ்கூல் ஆப் பிஸினஸில் நிர்வாகவியல் படிப்பை முடித்தவர் ரத்தன் டாடா. 1995-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த சாதனையாளர் விருதினையும் அவர் பெற்றுள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தின் 102 ஆண்டு கால வரலாற்றில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று இவ்வளவு பெரிய தொகையை நன்கொடையாக அளிப்பது இதுவே முதல்முறை.
புதிதாக கட்டப்படும் வளாகத்துக்கு டாடா ஹால் என்று பெயர் சூட்டப்போவதாகவும், 2013-ல் இது செயல்படத் துவங்கும் என்றும் ஹார்வர்டு பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
டாட்டா
தர்மபிறப்பு இந்திய பள்ளிகள் கல்லூரிகளுக்கும் கொஞ்சம் தர்மம் செய்யுங்க .எங்கிருந்து துட்டு வருது ஏழை இந்தியனுக்கும் பங்குண்டு .
0 comments:
Post a Comment