Friday, April 9, 2010

சானியா மிர்சா


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்வது என்று சானியா மிர்சா எடுத்த முடிவு சரியான முடிவுதானா? என்று ஐதராபாத் நகர மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் சானியா மிர்சாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்து கூறியவர்களில் சுமார் 44 சதவீதம் பேர் சானியா எடுத்த திருமண முடிவு சரியான முடிவுதான். அதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

சானியா சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்து இருப்பதாக கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூறி உள்ளனர். 23 சதவீதம் பேர் மட்டுமே சானியாவின் திருமண முடிவு சரி அல்ல என்று கூறி உள்ளனர்.

சோயிப்பை திருமணம் செய்து கொள்ள சானியா மிர்சா ஆசைப்பட்டதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 62.5 சதவீதம் பேர் காதல்தான் காரணம் என்று கூறி உள்ளனர். ஆயிஷா நெருக்கடி கொடுத்ததற்கு ஐதராபாத் மக்களில் 60 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சானியா மிர்சா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று 55 சதவீதம் பேர் கூறி உள்ளனர்

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More