Sunday, April 18, 2010

இந்திய நக்சல் ,மாவோயிஸ்ட் நடவடிக்கைகளை மன்னிக்கமுடியாது

சத்திஸ்கரில் நக்சலைட்டுகளின் அதிரடித்தாக்குதலில் 76 போலீசார் பலி. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு 76 போலீஸார் பலி என்றும், 40 லட்சம் மத்திய அரசும், தலா 5 லட்சம் மாநில அரசும் என முன்னர் மாவோஸ்டுகளால் கொல்லப்பட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெறாத சலுகையாக அறிவிககப்படுள்ளது

மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா என இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளால் மாநில போலீஸ் மீதும், இராணுவப்படைகளின் மீதும் பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசும் மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்ட பெருந்திட்டங்களைத் தீட்டி தனது படைகளை ஏவுகிறது.

யார் இந்த மாவோயிஸ்டுகள் எப்படி இவ்வளவு பலம் வந்தது . ஜனநாயக முறைகள் அவர்களுக்கு சரியான வாழ்க்கை முறையை கொடுக்கவில்லையா?

போலீஸ் வேலையில் சேருபவர்கள் எல்லரும் மாவோயிஸ்டுகள் உள்ள இடங்கல்லில் பணி செய்ய செல்ல அவர்களுது குடும்பம் ஒத்துகொள்ளாது
நக்சல்
வளராமல் அவர்கள் ஜனநாயகம் பக்கம் வர வழிவகை செய்யவேண்டும்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவு

துப்பாக்கி பிடித்தவன் துப்பாகியால் சாவு

எரிமலை வெடித்ததால் விமான போக்குவரத்துக்கு இடையூறு


லண்டன்:ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் தூசி மண்டலம், வான்வெளியில் நேற்றும் அதிகமாகக் காணப்பட்டது. இதனால், மூன்றாவது நாளாக, ஐரோப்பிய நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் 17 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஐஸ்லாந்து நாட்டில் பனிமலை அடுக்குகளின் கீழ் உள்ள எரிமலை கடந்த 14ம் தேதி, பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலை வெடிப்பில் இருந்து வெளியேறிய தீக்குழம்புகள், அந்த பகுதி முழுவதும் பரவியுள்ளன.எரிமலை வெடித்ததால் வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம், அந்த பகுதியில் 11.கி.மீ., சுற்றளவுக்கு வான்வெளியில் பரவியுள்ளது.

இந்த சாம்பல் தூசி மண்டலத்தில் நிறைந்து காணப்படும் துகள்களால், விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்பட்டு, பெரும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதன் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக, பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்கா, கனடாவிலும் விமான சேவை பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஐஸ்லாந்து வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன.

எரிமலையில் நேற்றும் சீற்றம் இருந்தது. அதிலிருந்து அதிக அளவில் சாம்பல் தூசி வெளியேறி, வான்வெளியை சூழ்ந்தது. இதனால், நேற்றும் விமானங்கள் இயக்கப்படவில்லை. எரிமலை வெடிப்பு காரணமாக, உலகம் முழுவதும் 17 ஆயிரம் விமானங்கள், இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு தினமும், பல கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூன்றாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தன. இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள், தொடர்ந்து பயணம் செய்ய முடியாமல், விமான நிலையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.

'எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் எப்போது முழுமையாக மறைந்து, வான் பகுதி சீராகும் என்பதை உறுதியாகக் கூற முடியாது. சில நேரங்களில் மாதக்கணக்கில் கூட, இந்த தூசி மண்டலம் காணப்படும்' என, எரிமலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.இதனால், விமானப் பயணிகளும், விமான போக்குவரத்து நிறுவன அதிகாரிகளும் கலக்கம் அடைந்துள்ளனர்.

சென்னையிலும்பாதிப்பு:சென்னையில் இருந்து புறப்படும் மூன்று விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. சென்னை - பிராங்பர்ட் செல்லும் லுப்தான்சா, சென்னை - லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், சென்னை - பிரஸ்ஸல்ஸ் செல்லும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 9, 2010

சானியா மிர்சா


பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்வது என்று சானியா மிர்சா எடுத்த முடிவு சரியான முடிவுதானா? என்று ஐதராபாத் நகர மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான மக்கள் சானியா மிர்சாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கருத்து கூறியவர்களில் சுமார் 44 சதவீதம் பேர் சானியா எடுத்த திருமண முடிவு சரியான முடிவுதான். அதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.

சானியா சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்து இருப்பதாக கருத்து தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூறி உள்ளனர். 23 சதவீதம் பேர் மட்டுமே சானியாவின் திருமண முடிவு சரி அல்ல என்று கூறி உள்ளனர்.

சோயிப்பை திருமணம் செய்து கொள்ள சானியா மிர்சா ஆசைப்பட்டதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் மற்றொரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 62.5 சதவீதம் பேர் காதல்தான் காரணம் என்று கூறி உள்ளனர். ஆயிஷா நெருக்கடி கொடுத்ததற்கு ஐதராபாத் மக்களில் 60 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு சானியா மிர்சா தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று 55 சதவீதம் பேர் கூறி உள்ளனர்

நித்யானந்தா


பிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதவைத் திற காற்று வரட்டும் என்றெல்லாம் வசீகரமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியவர் நித்யானந்தர்.
32 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. நல்ல ஆங்கிலப் புலமை, தமிழ் பேச்சுத் திறன் மிக்கவர்.
உலகின் ஆன்மீக ஒளி நானே என்று கூறிக் கொண்டவர். அமெரிக்காவின் இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் இவர்.
இளம் வயதிலேயே புலன்களை அடக்கி பிரமச்சர்யம் மேற்கொள்பவர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இந்த சாமியார், நடத்திய காமலீலைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
நன்கு தெளிவான வீடியோ காட்சிகளாக இவை படம்பிடிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபட்டன.
இந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தர்தான் என்றும் அதில் வரும் நடிகை ஆர் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்ட பிரபல தமிழ் நடிகை ரஞ்சிதா என்று செய்திகள் உறுதியாகக் கூறுகின்றன.
இந்த விவகாரம் வெளியானதும் உலகெங்கும் இந்த நித்யானந்தருக்கு உள்ள பக்தர்கள் (?!) பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More