Sunday, December 7, 2008

பாரதியார்

அச்சமில்லை அச்சமில்லை (பண்டாரப் பாட்டு)அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேஇச்சகத்துளோர் எல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேதுச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேபிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேஇச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேகச்சணிந்த கொங்கை மாந்தர் கண்கள் வீசும் போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேநச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டும் போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேபச்சை யூனியைந்த வேற்படைகள் வந்த போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையேஉச்சி மீது வானிடிந்து வீழூகின்ற போதிலும்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

0 comments:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More