SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, காட்டாங்குளத்தூர் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA-SRM IST) NCC மற்றும் யுனிவர்சல் மனித மதிப்புகள் (UHV) உடன் இணைந்து " பொக்கிஷத்தை குப்பையில் போடாதே" என்ற கருப்பொருளுடன் தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் கீழ் இன்று (டிசம்பர் 03, 2022) காலை 6 மணிக்கு பொத்தேரி ஏரி கரையோர சாலைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
டாக்டர்.வ.திருமுருகன் (இணை இயக்குனர் (சிஎல்) மற்றும் நோடல் அதிகாரி (யுபிஏ-எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) இந்த நடவடிக்கைக்கு பங்கேற்பாளர்களை வரவேற்றார். நிகழ்வை டாக்டர் எம்.வைரமணி (டீன்-பயோ இன்ஜினியரிங்) துவக்கி வைத்தார். நாட்டின் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மகாத்மா காந்திஜியின் தொலைநோக்கு பார்வையை அவர் முன்வைத்தார்.நாட்டின் குடிமகனாக தெருக்களையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார் .
டாக்டர்.பி.சுப்ரஜா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் -யுஎச்வி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரைகளையும் பங்கேற்பாளர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கினார்.
பொத்தேரி ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதை , சாலைகள் தூய்மை செய்யும் இந்த இயக்கத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சேகரிக்கப்பட்ட கழிவுகளின் மொத்த எடை 361 கிலோவாகும்.