நாடாளுமன்ற தேர்தலையொட்டி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் செல்போன் வழங்க மத்திய அரசு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
''ஒவ்வொருவர் கையிலும் கைபேசி" திட்டத்தின்படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து மக்களுக்கும் செல்போன், 200 நிமிடங்கள் இலவச டாக் டைம் வழங்க சுமார் 7000 கோடி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதை பிரதமர் மண் மோகன் சிங் சுதந்திர தினம் அல்லது சுதந்திர தின விழா அறிக்கையில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டே இத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது என்று பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மின்சார வசதிகூட இல்லாமல் பல கிராமங்கள் பின்தங்கியுள்ள நிலையில் மின்சாரமே இல்லாமல் செல்போன் வழங்குவது என்பது ஒரு கேலி கூத்து என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் செல்போனை யார் ரிஜார்ச் செய்வார்கள் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சமீபத்தில் 28 ரூபாயில் சராசரி இந்தியர்கள் குடும்பம் வாழ்க்கை நடத்த முடியும் என்று மத்திய திட்டக்குழு தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா வெளியிட்ட அறிவிப்பு நாடே சிரிக்கும் வகையில் இருந்தது. இதையடுத்து இந்த திட்டம் மூலம் மத்திய அரசு இந்திய மக்களை கேலி கூத்தாட வைத்துவிடும் போல் இருக்கிறது.