Sunday, May 8, 2011

+2 தேர்வு முடிவுகள் , மாணவி முதலிடம் -1190 மதிப்பெண்

சென்னை: பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.

ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் 195, ஆங்கிலம் 196, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் தலா 200.

2வது இடத்தில் வேல்முருகன்

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 மாணவர்களுக்கு 3வது இடம்

நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி, ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,23,545 மாணவ, மாணவியர் பிளஸ்டூ தேர்வு எழுதினர். தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள் 57,086 பேர்.

Sunday, April 24, 2011

குரு சத்திய சாயி பாபா காலமானார்-24 ஏப்ரல் 2011

24 ஏப்ரல் 2011: இந்திய குரு சத்திய சாயி பாபா காலமானார்

இந்திய ஆன்மீக குரு பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூர் நேரம் 0740 மணிக்கு புட்டபர்த்தியில் காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை இயங்காமல் போனதால் அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


84 வயதாகும் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக சத்ய சாய் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் கடந்த மாதம் 28ம் திகதி சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இவருக்கு மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. இச்செய்தியை சத்திய சாயி உயர் மருத்துவ அறிவியல் கழகத்தின் பணிப்பாளர் ஏ. என். சஃபாயா அறிவித்துள்ளார். இவரது மறைவு துயரச்செய்தி கேட்டு உலகம் முழுவதும் உள்ள பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.


சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். பக்தர்கள் சாய்பாபாவை கடவுளின் அவதாரமாகவே பார்க்கின்றனர். இவரது ஆசிரமம் புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப்பட்டது. பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்ட சாயிபாபா, லிங்கம், விபூதி, மோதிரம், போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்யப்படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்து வந்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் குடியரசுத்தலைவர், பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்துள்ளார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.


சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. சத்தியசாயி மருத்துவ அறிவியல் கல்விக் கழகம் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.


1993 சூன் 6 ல் சாய்பாபாவை கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. பாலியல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் இவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.


சாயிபாபாவின் உடல் பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாயி குல்வந்த் மண்டபத்தில் பக்தர்களின் அஞ்சலிக்காக இன்று மாலை 6 மணியிலிருந்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் புதன்கிழமை காலை சாயி குல்வந்த் மண்டபத்தில் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிசெய்தி- நன்றி)

Friday, April 22, 2011

Earth day 22-4-2011

Thursday, April 14, 2011

இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள்

இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதிகள் வேட்பாளர்கள்
1 திருத்தணி இ.எஸ்.எஸ்.ராமன்
2 ஆவடி தாமோதரன்
3 திருவிக நகர் டாக்டர் நடேசன்
4 ராயபுரம் ஆர் மனோ
5 திநகர் டாக்டர் செல்லக்குமார்
6 அண்ணா நகர் அறிவழகன்
7 மயிலாப்பூர் தங்கபாலு
8 ஸ்ரீபெரும்புதூர் டி யசோதா
9 மதுராந்தகம் ஜெயக்குமார்
10 ஆலந்தூர் டாக்டர் காயத்ரி தேவி
11 வேலூர் ஞானசேகரன்
12 சோளிங்கர் அருள் அன்பரசு
13 ஆம்பூர் விஜய் இளஞ்செழியன்
14 ஓசூர் கோபிநாத்
15 கிருஷ்ணகிரி சயீத்
16 செங்கம் செல்வப்பெருந்தகை
17 கலசப்பாக்கம் விஜயக்குமார்
18 செய்யார் விஷ்ணுபிரசாத்
19 ரிஷிவந்தியம் சிவராஜ்
20 ஆத்தூர் அர்த்தநாரி
21 சேலம் வடக்கு ஜெயப்பிரகாஷ்
22 திருச்செங்கோடு எம் ஆர் சுந்தரம்
23 ஈரோடு மேற்கு யுவராஜா
24 மொடக்குறிச்சி பழனிசசாமி
25 காங்கேயம் விடியல் சேகர்
26 உதகை கணேஷ்
27 அவினாசி நடராஜன்
28 தொண்டாமுத்தூர் கந்தசாமி
29 சிங்காநல்லூர் மயூரா ஜெயக்குமார்
30 வால்பாறை கோவை தங்கம்
31 நிலக்கோட்டை ராஜாங்கம்
32 வேடசந்தூர் தண்டபாணி
33 கரூர் ஜோதிமணி
34 மணப்பாறை டாக்டர் சோமு
35 முசிறி எம் ராஜசேகரன்
36 அரியலூர் பாளை அமரமூர்த்தி
37 விருத்தாச்சலம் நீதிராஜன்
38 மயிலாடுதுறை ராஜ்குமார்
39 திருத்துறைப்பூண்டி செல்லத்துரை
40 பாபாபநாசம் ராம்குமார்
41 பட்டுக்கோட்டை ரங்கராஜன்
42 திருமயம் ராம சுப்புராம்
43 பேராவூரணி மகேந்திரன்
44 அறந்தாங்கி திருநாவுக்கரசர்
45 கராரைக்குடி கேஆர் ராமசாமி
46 சிவகங்கை ராஜசேகரன்
47 மதுரை வடக்கு ராஜேந்திரன்
48 மதுரை தெற்கு வரதாஜன்
49 திருப்பரங்குன்றம் சுந்தரராஜன்
50 விருதநகர் நவீன் ஆம்ஸிடரா்ங்
51 பரமக்குடி கேவி ஆர் பிரபு
52 விளாகத்திகுளம் பெருமாள் சாமி
53 வாசுதேவநால்லூர் கணேசன்
54 கடையநல்லூர் பீட்டர் அல்போன்ஸ்
55 நாங்குநேரி வசந்தகுமார்
56 ஸ்ரீவைகுண்டம் சுடலையாண்டி
57 ராதாபுரம் வேல்துரை
58 குளச்சல் ஜே.ஜி. பிரின்ஸ்
59 விளவங்கோடு விஜயதரணி
60 கிள்ளியூர் ஜான் ஜேக்கப்
61 ராமநாதபுரம் கே.என்.அசன் அலி
62 பூந்தமல்லி ஜி.வி.மதியழகன்
63 திருப்பூர் தெற்கு கே.செந்தில்குமார்

■கருத்து கணிப்பு முக்கியம் அல்ல மக்கள் கணிப்புதான் முக்கியம் : வாசன்!
■அதிமுக தேர்தல் அறிக்கை பொதுமக்கள் நம்பவில்லை : ஜி.கே.வாசன்!
■விஜயகாந்தின் அடி, குடியால் தமிழகத்துக்கே தலைகுனிவு
■ரிஷிவந்தியத்தில் விஜயகாந்தை தோற்கடிப்போம்
■தனி விருத்தாசலம் மாவட்டம்: காங் வேட்பாளர் நீதிராஜன் உறுதி

பாபநாசம் தொகுதி நிலவரம்

பாபநாசம்

மொத்த வாக்காளர்கள் ------195278
ஆண் வாக்காளர்கள்--------- 97774
பெண் வாக்காளர்கள்--------- 97504

2006 ஒரு பார்வை

மொத்த வாக்காளர்கள்------ 161259
ஆண் வாக்காளர்கள்--------- 79896
பெண் வாக்காளர்கள்--------- 81363
மொத்த வாக்கு பதிவனவை 122803
ஆண் வாக்கு பதிவனவை--- 60948
பெண் வாக்கு பதிவனவை--- 61855

பாபநாசம் தொகுதி
வேட்பாளர்கள்

ம .ராம்குமார் - காங்கிரஸ்
ரா. துரைகண்ணு - அ.தி.மு.க

பாபநாசம் தொகுதி வேட்பாளர்கள் மனு தாக்கல் விவரங்கள்


திமுக கூட்டணி வேட்பாளர் ராம்குமார் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2025%20M.RAMKUMAR.pdf
அதிமுக கூட்டணி வேட்பாளர் துரைக்கண்ணு உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2024%20R.DORAIKKANNU.pdf

சுயேச்சை வேட்பாளர்கள்
முகமதுகனி உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2025%20A.MOHAMED%20GANI.pdf
கருணாநிதி உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2024%20M.KAUNANIDHI.pdf
திருமேனி உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2025%20R.THIRUMENI.pdf
ஜெகநாதன் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2025%20T.JAGANATHAN.pdf
தமிழ்செல்வன் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/
ராஜா உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/
அரசன் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/
குழந்தைவேலு உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/
ராஜ் மொஹம்மத் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/
வாசுதேவன் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/

அகில பாரத இந்து மகா சபை வேட்பாளர் சாம்பா வைத்தியநாதன் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2019% 20K.SAMBAVAIDYANATHAN.pdf

பாரதிய ஜனதாக் கட்சி வேட்பாளர் மகேந்திரன் உறுதிமொழி பத்திரம் http://www.thanjavur.tn.nic.in/election2011/pdf/papa%2021%20T.MAHENDRAEN.pdf



பாபநாசம் தொகுதி அறிமுகம் * வரிசை எண் : 172

* வாக்காளர்கள்:
ஆண்கள்: 97,774, பெண்கள்: 97,504, மொத்தம் : 1,98,278

* மொத்த வாக்குச்சாவடிகள்: 252

* தேர்தல் நடத்தும் அலுவலர் / செல்போன் எண்:

மாவட்ட ஆதிதிராவிடர் -பழங்குடியினர் நல அலுவலர்

ஏ. ஜேம்ஸ் செல்லையா - செல்: 91596 02885,

போன்: 04662- 230121, தொலை நகல்: 04362- 230857.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கையில் 2-வது பெரிய தொகுதி இது. வட்டத் தலைநகராக பாபநாசம் உள்ளது. வலங்கைமான் தனித் தொகுதி கலைக்கப்பட்ட போது அதிலிருந்த அம்மாப்பேட்டை ஒன்றியம் முழுவதும், கும்பகோணம் ஒன்றியத்தின் ஒரு பகுதி, சுவாமிமலை பேரூராட்சிகளை இணைத்து இத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டது. திருவையாறு சாலையில் சோமேஸ்வரபுரம், நாகை சாலையில் பூண்டி, கும்பகோணம் சாலையில் திருபாலைத்துறை, கபிஸ்தலம் சாலையில் பொன்பேத்தி, தஞ்சை சாலையில் பசுபதிகோயில் வரை.

*தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

பாபநாசம் ஒன்றியத்தின் 34 ஊராட்சிகள், அம்மாப்பேட்டை ஒன்றியத்தின் 46 ஊராட்சிகள், கும்பகோணம் ஒன்றியத்தின் 5 ஊராட்சிகள், பாபநாசம், அம்மாப்பேட்டை, அய்யம்பேட்டை, மெலட்டூர், சுவாமிமலை பேரூராட்சிகள்.

ஊராட்சிகள்-

பாபநாசம் ஒன்றியம்: அலவந்திபுரம், ஆதனூர், இழுப்பைக்கோரை, ஈச்சங்குடி, உமையாள்புரம், உம்பலப்பாடி, உள்ளிக்கடை, ஓலைப்பாடி, கணபதியக்ரஹாரம், கபிஸ்தலம், ஊனஞ்சேரி, கொந்தகை, கோபுராஜபுரம், கோவிந்த நாட்டுச்சேரி, சக்கராப்பள்ளி, சத்தியமங்கலம், சரபோஜிராஜபுரம், சருக்கை, சூலமங்கலம், சோமேஸ்வரபுரம், தியாகசமுத்திரம், திருமண்டங்குடி, திருவைக்காவூர், துரும்பாவூர், பசுபதிகோயில், பண்டாரவாடை, பெருமாள்கோயில், மணலூர், மேலகபிஸ்தலம், ராஜகிரி, ராமானுஜபுரம், ரகுநாதபுரம், வழுத்தூர், வீரமாங்குடி.
அம்மாப்பேட்டை ஒன்றியம்: அருந்தவபுரம், கருப்பமுதலியார்கோட்டை, புளியகுடி, கம்பர்நத்தம், சூழியக்கோட்டை, சாலியமங்கலம், திருபுவனம், அருமலைக்கோட்டை, சென்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை, கத்தரிநத்தம், ஆலங்குடி, களக்குடி, நெல்லித்தோப்பு, குமிளக்குடி, புலவர்நத்தம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி,


எடவாக்குடி, களஞ்சேரி, பள்ளியூர், இரும்புத்தலை, விழுதியூர், கொத்தங்குடி, அன்னப்பன்பேட்டை, கோவிந்தகுடி, இடையிருப்பு, திருக்கருக்காவூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர், அகரமாங்குடி, வடக்குமாங்குடி, செருமாக்கநல்லூர், பெருமாக்கநல்லூர், காவலூர், வையச்சேரி, வேம்புகுடி, தேவராயன்பேட்டை, திருவையாத்துக்குடி, மேலசெம்மங்குடி, உக்கடை, நெடுவாசல், மகிமாலை, மெய்குன்னம், கீழகோவில்பத்து, வடபாதி.


கும்பகோணம் ஒன்றியம்: நாகக்குடி, திருவலஞ்சுழி, வளையப்பேட்டை, பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள்கோயில்.

Saturday, February 5, 2011

டாஸ்மாக் விற்பனை -தமிழக அரசு குடிமகன்களை வளர்கிறது

ஒரு அரசு மது கடை நிறுவனம்
டாஸ் மாக் விற்பனை மூலம் ரூபாய் 14,152 கோடி வருமானம் அரசுக்கு வந்துள்ளது .இது டாஸ்மாகில் விற்பனை வரி மற்றும் எச்சிஸ் வரி ஆகியவற்றின் மூலம் 6223 கோடிகள் மற்றும் ,7929 கோடிகள் மொத்தம் 14,152 கோடிகள் வருவாய் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது .
டாஸ்மார்க் விற்பனை அதிகரிப்பால் தமிழக அரசு வருவாய் . தமிழக குடிமகன்களை வளர்கிறது . குடும்ப பெண்மணிகளுக்கு குடும்பம் நடத்துவதில் சிரம்மம் . அல்லது குடும்பம் உறுப்பினர்கள் அனைவரும் டாஸ்மாக் செல்லும் காலம் வரும் . இளைஞ்சர்கள் மதுவுக்கு அடிமை அவது அதிகரித்துள்ளது .
டாஸ்மாக் அருகில் பார்கள் நடத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துள்ளது .
முன்பெல்லாம் மது கடை செல்வது கேவலம் என்ற நிலைமை மாறி டாஸ்மாக் , பார் என்று நாகரிகமாக மாறிஉள்ளது .
அரசாங்கமும் இந்த நாகரிகமான தொழில் மூலம் வருவாய் பெற்று ஆட்சி செய்து பிளைப்பு நடத்துகிறது . இதை பார்த்து அண்டை மாநிலமும் நடத்த யோசிக்கிறது .
கோவில் . சர்ச் ,மசூதி ,பொது பேருந்து நிலையம் , மற்றும் பள்ளி கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடை திறப்பதால் அந்த பகுதியில் பகல் நேரத்தில் குடிமகன்களில் தொந்தரவு அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையால் மாணவர்கள் ,மாணவிகள் பள்ளியை விட்டு வீட்டு திரும்பும்போது குடிமகன்களால் தொந்தரவு அதிகரித்துள்ளது.
பார் வசதிகள் இல்லாத டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி டாஸ்மாக் கடை வாசல் ,ரோடு ,பக்கத்தில் குடி இருபவர்கள் வீடுகள் முன் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது .
சட்டம் ஒழுங்கு பார்க்கும் போலீஸ் காரர்கள் டாஸ்மாக் கஸ்டமர் .
டாஸ்மாக் தமிழகத்தின் ஒரு அங்கமாகிவிட்டது .
இதனை யார் வந்தும் மாற்ற முடியாது யென்கிற நிலை.

Friday, January 28, 2011

ஜி.எஸ்.எல்.வி – சில தகவல்கள்

ஜி.எஸ்.எல்.வி – சில தகவல்கள்!
January 25, 2011

ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?

Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), இன்சாட் வகை செயற்கைக் கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. செய்கிறது.

இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால், வீட்டிலிருந்து உங்களை அலுவலகத்துக்கு ஸ்கூட்டர் கொண்டு செல்கிறது இல்லையா? செயற்கைக் கோள்களுக்கு ஸ்கூட்டர் என்று ஜி.எஸ்.எல்.வி.யை புரிந்துகொள்ளலாம்.

நம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற முன்னேறிய நாடுகளின் ராக்கெட்டுகளை நாம் பயன்படுத்த வேண்டுமானால் பல்லாயிரம் கோடி செலவாகும். ஜி.எஸ்.எல்.வி. நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய நிபுணர்களால் செயல்படுத்தப்படுவது என்பதால் சிக்கனமானது. அதாவது சில நூறு கோடிகள்.

ஜி.எஸ்.எல்.வி பிறந்த கதை

உலகோடு உறவாடக்கூடிய (Geosynchronous satellites) செயற்கைக் கோள்கள், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தச் செயற்கைக் கோள்களை உருவாக்கிவிடக் கூடிய நாடுகளால், அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை சுலபமாக ஏற்படுத்திவிட முடிவதில்லை.'

1990ல் இந்தியா தனது செயற்கைக் கோள்களை தானே செலுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்தது. ஏனெனில் அதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை நமக்கு சோவியத் யூனியன் செய்து வந்தது. அந்நாடு சிதறுண்ட நிலையில் சொந்தக்காலில் நிற்கவேண்டிய அவசியத்தை இந்தியா உணர்ந்தது.

ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle) தொழில்நுட்பத்தில் நமது நிபுணர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால் ஜி.எஸ்.எல்.வி.யை வெற்றிகரமாக உருவாக்கிடும் தன்னம்பிக்கை நம்மவர்களுக்கு நிறையவே இருந்தது. ஜி.எஸ்.எல்.வி.யை இயக்கிடும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை நமக்கு மற்ற நாடுகள் நியாயமற்ற காரணங்களுக்காக மறுத்தன (இந்திய கிரையோஜெனிக் கதையை பெட்டிச் செய்தியாக காண்க). எனினும் ஏற்கனவே நாம் பெற்றிருந்த ரஷ்ய என்ஜின்களை வைத்து 18, ஏப்ரல் 2001 அன்று வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி.யை ஏவினோம்.

கட்டமைப்பு எப்படி?

பி.எஸ்.எல்.வியை மேம்படுத்தியே, மேலதிக நவீன தொழில்நுட்பத்தோடு ஜி.எஸ்.எல்.வி. உருவாகி இருக்கிறது. இது மொத்தம் மூன்று அடுக்குகளாக இருக்கும். கீழ் அடுக்கு முழுக்க திடப்பொருட்கள் அடங்கியது. இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்குகள் திரவங்கள் நிரம்பியது. மூன்று அடுக்குகளிலுமே விண்ணுக்கு உந்திச் செல்லும் (propelled) இயந்திரங்கள் நிரம்பியிருக்கும். முதல் இரண்டு அடுக்குகளும் பி.எஸ்.எல்.வி. மாதிரியே இருக்கும். மூன்றாவது அடுக்கில்தான் ஜி.எஸ்.எல்.வியின் சிறப்பம்சமான கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஏன் கிரையோஜினிக்?

பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை சுமந்தபடி மிக்ககுறுகிய காலம் மட்டுமே பயணிக்கும். அவையின் சக்தி அவ்வளவுதான். இதனால் சில நூறு கிலோ மீட்டர்கள் உயரத்தில்தான் செயற்கைக்கோள்களை நிறுவமுடியும்.

35,000 கி.மீ உயரத்தில் நிறுவக்கூடிய செயற்கைக்கோள்கள்தான் பன்முகப்பயன்களை தரக்கூடியவை. குறிப்பாக தகவல் தொடர்புக்கு ஏதுவான செயற்கைக்கோள்களை இந்த உயரத்தில்தான் நிறுத்தியாக வேண்டும். இதற்கு பி.எஸ்.எல்.வி சரிப்படாது. ஜி.எஸ்.எல்.வி. தான் ஒரே தீர்வு. மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களை பொருத்தினால் மட்டுமே இவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை அனுப்பமுடியும். அந்த இயந்திரம்தான் கிரையோஜெனிக்.

மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவைதான் கிரையோஜெனிக்கின் எரிபொருள். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் திரவநிலையில் இருக்கும். ராக்கெட் கிளம்புவதற்கு முன்பான 30 நொடி வரை இந்த எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஜி.எஸ்.எல்.வி. எத்தனை முறை ஏவப்பட்டது?

ஜி.எஸ்.எல்.வி. இதுமுறை ஏழு முறை ஏவப்பட்டிருக்கிறது. முறை ஏப்ரல் 2001லும், மே 2003லும் ஜி-சாட் 1, ஜி-சாட் 2 ஆகியவை ஏவப்பட்டது. EDUSAT தகவல் செயற்கைக்கோள் செப்டம்பர் 2004ல் வெற்றிகரமாக விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜூலை 2006ல் இன்சாட்-4சியை ஏவ நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இயந்திரக்கோளாறு ஏற்பட்டதின் காரணமாக வங்காள விரிகுடாவுக்கு மேலாக ராக்கெட்டும், செயற்கைக்கோளும் வெடித்துச் சிதறடிக்கப்பட்டன. முந்தைய தோல்வியை ஈடுகட்டும் வகையில், செப்டம்பர் 2007ல் இன்சாட் 4சிஆர் விண்ணில் நிறுவப்பட்டது.

ஏப்ரல் 2010ல் ஜிசாட்-4னை சுமந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தது. கிரையோஜெனிக் இயந்திரத்துக்கு செல்லவேண்டிய எரிபொருள் தடைபட்டதால் இம்முயற்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் ஜிசாட்-5பியை விண்ணில் நிறுவ நடந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இவ்வாண்டில் ஜி-சாட்6-ஐ விண்ணில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கிறது. 2003 மற்றும் 2004ல் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இடத்தில் விண்ணில் சரியாக நிறுவப்பட்டவை.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள், சென்னையில் இருந்து 80 கி.மீ தூரத்தில், ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது.

தோல்வி

வருட கடைசியில் ஜிசாட் -5பியை நிறுவும் முயற்சியில் இந்தியா தோல்வியடைந்திருப்பது நிச்சயமாக இஸ்ரோவுக்கு பெரிய பின்னடைவுதான். கடந்த ஏப்ரல் மாதம், முதன்முறையாக முழுக்க இந்திய தொழில்நுட்பத்தோடு கூடிய கிரையோஜெனிக் எந்திரத்தை உருவாக்கி ஜிசாட் -4ஐ ஏவும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கிறது. பி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தில் இன்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் மரியாதையை, நிச்சயமாக இந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்விகள் குலைக்கும். 2013ஆம் ஆண்டு நாம் ஜி.எஸ்.எல்.வி. மூலமாகதான் சந்திராயன்-2ஐ ஏவ இருக்கிறோம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் எழுச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு மகத்தானது. இந்நிறுவனத்தின் வெற்றிகளும், தோல்விகளும் இந்திய கவுரவத்தோடு சம்பந்தப்பட்டது. கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைதான் முதலில் சுற்றிப் பார்த்தார். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவோடு கைகோர்த்து செயல்பட அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தியாவும், சீனாவும்தான் எதிர்காலத்தில் ராக்கெட், செயற்கைக்கோள் தொடர்பான வான்வழி வர்த்தகத்தில் கோலோச்சப் போகிறார்கள் என்று பாரிஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கணக்கீடு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் கடந்த வருடத்தில் அடுத்தடுத்து பெற்றிருக்கும் இரு தோல்விகள் கொஞ்சம் சோர்வடையவே செய்கின்றன.

அதே நேரத்தில் கடந்த மாதம் ரஷ்யா, ஓராண்டுக்கு முன் நாசா (அமெரிக்கா), மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறிய நாடுகளும் கூட சமீபமாக சில தோல்விகளை கண்டிருக்கிறார்கள். ராக்கெட் அறிவியலுக்கே கொஞ்ச காலமாக சகுனம் சரியில்லை போலும்.

இந்திய-கிரையோஜெனிக் கதை!

2003 மார்ச் மாதம். பிரதமர் வாஜ்பாய் பாராளுமன்றத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அறிவித்தார். "நாமே கிரையோஜெனிக் எந்திரத்தை சொந்தமாக உருவாக்கும் தொழில்நுட்ப தன்னிறைவைப் பெற்றுவிட்டோம்!" – இந்தியா அன்று அடைந்த பெருமிதத்துக்கு பின்னால்தான் எவ்வளவு அரசியல் சூழ்ச்சிகள்?

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை நாம் 1993ல் இருந்து பயன்படுத்தி வருகிறோம். 1998ல் பொக்ரானில் செய்யப்பட்ட அணுசோதனை நம்மை உலகின் மற்றநாடுகளிடமிருந்து விலக்கி வைத்தது. மற்ற நாட்டு விஞ்ஞானிகளோடு நம் விஞ்ஞானிகளுக்கு இருந்த தொழில்நுட்ப ஆலோசனை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை சுமந்துச் செல்லும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு, நமக்கு தொழில்நுட்பம் மறுக்கப்பட்டது.

இதற்குப் பின்னால் உலகத்தின் பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டாலும், வணிகம் – மிகப்பெரிய வணிகம்தான் உண்மையான காரணம். அமெரிக்கா, ரஷ்யா, சைனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தார்கள். தகவல் தொடர்புக்கு ஏதுவான பெரிய செயற்கைக்கோள்களை ஒரு நாடு விண்ணில் நிலைநிறுத்த வேண்டுமானால் இவர்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டும். மிகப்பெரிய பணவர்த்தனை நடைபெறும். இந்தியா, இந்த தொழில்நுட்பத்தில் கைதேர்ந்துவிட்டால் மிக்க்குறைந்த காசுக்கு மற்றவர்களுக்கு செயற்கைக்கோளை ஏவித்தரும் என்று இந்நாடுகள் அஞ்சின. இதனால் தங்கள் பங்குக்கு பங்கம் வரும் என்பதாலேயே உலகப் பாதுகாப்பை காரணம் காட்டின.

இந்நிலையில் இந்தியா தனக்கான தொழில்நுட்பத்தை தாமே வடிவமைப்பது என்று அதிரடியாக முடிவெடுத்தது. தமிழகத்தின் மகேந்திரபுரியில் Liquid Propulsion System Centre என்கிற இந்திய நிறுவனம் இந்த எந்திரங்களை உருவாக்குவதில் முனைப்பாக இயங்கி வருகிறது. 2002 பிப்ரவரியிலேயே சில நொடிகளுக்கு விண்ணில் செயற்கைக்கோளை உந்திச்செல்லும் இயந்திரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். 2002 செப்டம்பரில் 1000 நொடிகளுக்கு உந்திச்செல்லுகிற இயந்திரம் தயார். எவ்வளவு நொடிகளுக்கு இது விண்ணைக் கிழித்துச் செல்லும் என்பது மிக முக்கியம். அதிக நொடிகளுக்கு இயங்கும் இயந்திரத்தால்தான் நல்ல உயரத்தில், திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிறுவமுடியும். அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றிகண்ட பின்னரே மார்ச் 12, 2003 அன்று கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

கிரையோஜெனிக் இயந்திரங்களை காசுகொடுத்து வாங்குவது வேறு. தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒப்பந்தங்கள் மூலமாக பெறுவது என்பது வேறு. ரஷ்யாவிடமிருந்து நாம் மொத்தம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் 6 எந்திரங்களை இப்போது பயன்படுத்தி விட்டோம். 2011 மத்தியில் மீதியிருக்கும் எந்திரமும் ஏவப்பட்டு விடும். அனேகமாக நான் பிரான்ஸையோ, ரஷ்யாவையோ மீண்டும் உதவிக்கு நாட வேண்டிய அவசியம் வரலாம். இது தற்காலிகமானது.

நாம் உருவாக்கும் இயந்திரங்களை வைத்து நமது செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைபெறும்போது, மற்ற நாடுகளில் இருந்து நமக்கு 'கிரையோஜெனிக் ஆர்டர்' நிறைய வரும். இவ்வளவு நாட்களாக இந்த தொழில்நுட்பத்தை பூதம் மாதிரி அடைகாத்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த நாடுகளுக்கு நம் மீது எரிச்சலும் வரும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தெரிந்தால், இந்தியா அழிவுகர ஏவுகணைகளை உருவாக்கும் என்று இந்நாடுகள் முன்பு பூச்சாண்டி காட்டியதில்லையா? கடந்த இருபது ஆண்டுகளில் நாம் அப்படிப்பட்ட ஒரு ஏவுகணையை கூட இதுவரை உருவாக்கவில்லை. இவ்வகையிலும் இந்தியா முன்னேறிய நாடுகளின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.


(நன்றி : புதிய தலைமுறை)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More