காலத்தால் அழிக்கமுடியாத, அனைவராலும் மறக்க முடியாத கலைஞன் நாகேஷ் அவர்கள்.பலப்பல படங்களில் நகைச்சுவையில் மிளிர்ந்தார். நடிப்பிலும் கே.பி அவர்களின் பல படங்களில் (நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த்...) வெளுத்து கட்டினார்.இன்று திரையுலகின் எந்த விருதையும் வாங்காமல் நம்மை விட்டு மறைந்தார்.விருது வாங்கும் அனைத்து தகுதியும் அவருக்கு இருந்தும், அந்த விருதை அவருக்கு கொடுக்காமல் இருந்தது நாம் செய்த பெரிய பிழை. அன்னாரை பிரிந்து வாழும் குடும்பத்தார்க்கு நம் கண்ணீர் அஞ்சலி. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.