Saturday, January 11, 2025
Path to Longevity: Embracing Health, Harmony, and Vitality
Friday, September 13, 2024
Super clasico Turf Ground
Super Clasico Turf Rental Ground Facilities and
Tariff
Basic Facilities:
- Turf Field: Suitable for
various sports like football, cricket, etc.
- Lighting: Floodlights
available for evening or night games.
- Changing Rooms: Locker rooms
or changing facilities for players.
- Restrooms: Washroom
facilities with bathing showers for players and spectators.
Additional Amenities:
- Seating Area: Benches
provided for spectators.
- Parking: Designated
parking areas for vehicles.
- First Aid Kit: Basic medical
facilities or access to a first aid kit.
- Water Stations: Drinking
water dispensers available.
Optional Add-ons:
- Equipment
Rental: Availability of sports equipment like goalposts, nets, etc.
- Scoreboards: Manual or
electronic scoreboards.
- Refreshment
Stalls: Cafeteria or food and beverage services.
- Security: Security
personnel or surveillance cameras for safety.
Premium Services:
- Event
Management: Support available for organizing tournaments or events.
- PA System: Public
address systems for announcements and music.
- Wi-Fi: Internet
access for guests or players.
Operating Hours:
- Open 24 hours
Tariff per Hour:
Days / Timings |
Weekdays (Monday to Thursday) |
Weekend (Friday, Saturday &
Sunday) |
4:00 AM - 4:00 PM |
₹1200/hour |
₹1300/hour |
4:00 PM - 11:00 PM |
₹1400/hour |
₹1500/hour |
Booking online : https://superclasico.in/
Location:https://www.google.com/maps/place/Super+Clasico/@12.8388687,80.0495833,641m/data=!3m1!1e3!4m6!3m5!1s0x3a52f70027e2f137:0x172a04d70dbf5cb5!8m2!3d12.8388687!4d80.0521582!16s%2Fg%2F11w9v23pnl?authuser=0&entry=ttu&g_ep=EgoyMDI0MDkxMC4wIKXMDSoASAFQAw%3D%3D
Friday, August 30, 2024
Hot air balloon
Sunday, June 16, 2024
Shatabdi Express 12243 & 12244 (சென்னை டூ கோவை) தெரிந்து கொள்ளுங்கள்
சதாப்தி தொடர் வண்டி என்பது முக்கியமான பெருநகரங்களை மற்ற சுற்றுலா, தொழில் மற்றும் புனிதயாத்திரை ஆகியவற்றோடு தொடர்புடைய சிறு நகரங்களை இணைக்கும் பயணிகள் தொடர் வண்டி ஆகும். இவற்றை இந்திய இரயில்வே இயக்குகிறது.
The Shatabdi Express is a series of fast passenger trains
operated by Indian Railways. Introduced in 1988 to commemorate the birth
centenary of India's first Prime Minister Jawaharlal Nehru, the name Shatabdi
itself means "century" in Hindi.
These trains are day trains and mostly return to their origin station the same day. They are known for their speed and comfort, featuring air-conditioning, on-board catering, and in some cases, onboard entertainment systems. Unlike most other trains in India, Shatabdi Express seats have to be reserved in advance.
Here are some of the key features of Shatabdi Express trains:
Speed: Shatabdi Express trains run at a maximum permissible
speed of 110–150 km/h (68–93 mph).
Connectivity: These trains offer fast connectivity between
major cities with only a few intermediate stops.
Amenities: The trains are fully air-conditioned and
passengers are provided with on-board catering. Onboard entertainment systems
are available in select trains.
Classes: Shatabdi Express trains offer different classes of
accommodation, including Executive Chair Car and AC Chair Car.
If you are looking for a fast and comfortable way to travel
between major cities in India, the Shatabdi Express is a great option. However,
it is important to keep in mind that seats must be booked in advance as there
is no unreserved accommodation on these trains.
Train number 12243 is a train running between Chennai and Coimbatore. Chennai is located in the state of Tamil Nadu and Coimbatore is located in the state of Tamil Nadu.The two cities are located at a distance of 497kms.
Saturday, June 15, 2024
Village Panchayats Duties/கிராம ஊராட்சிகளின் கடமைகள்
கிராம ஊராட்சிகளின் சட்டரீதியான கடமைகள்/Statutory Duties of Village Panchayats
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110-ன் படி கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ளுதல் கிராம ஊராட்சிகளின் கட்டாய கடமைகளாகும்.
அனைத்து கிராமச் சாலைகள்,
பாலங்கள்,
சிறுபாலங்கள்,
தடுப்புச்சுவர்கள் மற்றும் தரைப்பாலங்களை அமைத்தல்,
பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல் (நெடுஞ்சாலைகள் மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் தவிர)
குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் அமைத்தல்.
கழிவு நீர்க் கால்வாய் அமைத்துக் கழிவுநீரை வெளியேற்றுதல்.
தெருக்களை சுத்தம் செய்தல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டின் மூலமாக சுகாதாரத்தை மேம்படுத்துதல்.
பொதுக்கழிப்பிட வசதி ஏற்படுத்துதல்
இடுகாடுகள் மற்றும் சுடுகாடுகளை ஏற்படுத்திப் பராமரித்தல்
குடிநீர் வழங்குதல்
சமுதாய சொத்துக்களை பராமரித்தல்
கிணறுகள் தோண்டுதல் மற்றும் பராமரித்தல் மற்றும்
குளம் தோண்டுதல், பராமரித்தல் மற்றும் பழுதுபார்த்தல்.
அவ்வப்போது அரசு அறிவிக்கை வாயிலாகப் பணிக்கக்கூடிய பிற கடமைகள்.
Revenue inspector roles and responsibilities/(RI)-வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்
RI - Revenue Inspector வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்
தமிழ்நாடு
அரசின் வருவாய்த் துறை, வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.
- பயிராய்வு
- கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
- நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
- கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
- “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.
- புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.
- ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.
- இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.
- முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.
- பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
- பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
- மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
- ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
- வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
- வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
- பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.
- பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.
- நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.
- குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
- நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.
- பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.
- வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
- முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.
- தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு கோப்புகளை தணிக்கை செய்தல்.
- கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.
- புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்
பிற
பணிகள்
- பொது இடங்களில் உள்ள மரங்களின் மதிப்பு நிர்ணயம் செய்தல்
- நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.
- கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.
- வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.
- சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.
- தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.
- மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
- கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.
- கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
- பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.
- மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.
- வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.
பாரதியார்-(Mahakavi Subramania Bharatiyar) கட்டுரை
மகாகவி சுப்ரமணிய பாரதியார். (1882 - 1921).
தமிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு-பாரதப் பெரு நாடு- உரிமையிழந்து, பெருமைகுன்றி, வெள்ளை யாட்சி யில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித் தார். 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனாவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையார் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதாந்தர வேட்கையை ஊட்டினார். சென்னையம் பதியின் கண்ணென விளங்கும் திருவல்லிக்கேணியிலே பல்லாண்டு வாழ்ந்தார் பாரதியார்; நாள் தோறும் அந்திமாலையில் கடற்காரையிலே நின்று ஆவேசமாய்ப் பாடுவார்; ஒருநாள் அக்கடலை நோக்கி ஆர்வமுறப் பேசலுற்றார்:-
"அருந்தமிழ்க்
கடலே! இன்று உன்னைக் காண ஏனோ என்
உள்ளம் களிக்கின்றது! நீள நினைந்து நெஞ்சம்
தழைக்கின்றது! 'எங்கள் அருமைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த வள்ளுவர் முன்னாளில்
உன்னைக் கண்டார்; உன் காற்றை உண்டார்;
உன் கரையில் உலாவினார்' என்று எண்ணும்பொழுது இன்பம் பொங்குகின்றது என் உள்ளத்தில்! 'உன்
மணற் பரப்பிலே நன்னீர் சுரந்து, அல்லி மலர் பூத்து நின்ற
கேணிதான் அக் கவிஞர் பெருமான்
கருத்தைக் கவர்ந்ததோ?' 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்ற அருமைத் திருக்குறள்
உன் அருகேயுள்ள திருவல்லிக்கேணியைத்தான் குறித்ததோ? இளங்காற்றளித்துச் சிறு நன்மை செய்த
உனக்கு எத்துணை அருமையான கைம்மாறு அளித்துவிட்டார் அப்பெருமான்! உன் அல்லி மணற்
கேணிக்கு அழியாப் பெரும் பதம் அளித்து விட்டாரே!
அவர் வாழ்த்துரையால்தான் திருவல்லிக் கேணிக்கு வாழ்வின்மேல் வாழ்வு வருகின்றதோ?
"நீலத்திரைக்
கடலே! உன்னைக் கடைக்கணித்த அப்பெருந்தகையை ஏழையேன் என்சொல்லி ஏத்துவேன்? மாநிலமெங்கும் புகழ் பெற்று விளங்கும் அப் பெருமானைத் தமிழகம்
செய்த தவக் கொழுந்து என்பனோ?
நானிலம் செய்த நற்றவத்தின் பயன் என்பனோ? ஒரு
மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பனோ? செந்தமிழ்ச் செம்மணிகளாய் இலங்கும் மும்மணிகளுள் அவரே நடு நாயகமாய்க்
காட்சி தருகின்றார். புனிதமான அக்காட்சியை என் புன் கவியால்
எழுதிக் காட்ட முடியுமா?ஆயினும் கடுக்கின்றது ஆசை; கதிக்கின்றது கவிதை.
"கல்விசி
றந்தத மிழ்நாடு-புகழ்க்
கம்பன்பி
றந்தத மிழ்நாடு-நல்ல
பல்வித
மாயின சாத்திரத் தின்மணம்
பாரெங்கும்
விசும்த மிழ்நாடு.
வள்ளுவன்
தன்னைஉ லகினுக் கேதந்து
வான்புகழ்
கொண்டத மிழ்நாடு-நெஞ்சை
அள்ளும்சி
லப்பதி காரமென் றோர்மணி
ஆரம்ப
டைத்தத மிழ்நாடு"
என்று
பாடுவேன்; ஆனந்தக் கூத்து ஆடுவேன்.
"நல்லோர்
போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக்
கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன
வண்ணன் - பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் - அடியார்க்கு எளியன் - நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்
"கண்ணைக்
கண்டேன் - எங்கள்
கண்ணனைக்
கண்டேன் மணி
வண்ணனை
ஞான மயிலினைக் கண்டேன்."
"தொல்புகழ்
வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார்
யார்? உன் கடற்கரையில் அன்று
தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது.
அன்று உன் அரங்கத்தில் எங்கள்
தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள்.
அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள்
இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்;
பேர் இழந்தாய்; 'திரிப்பளிக்கே'னாகத் திரிந்துவிட்டாய்!
"அல்லிக்
கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே,
வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த
நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?
"அறப்பெருங்
கடலே! வீர சுதந்தர வேட்கை
இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க
எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால்
பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள்
சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க
வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும்,
அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை
வீட்டியே தீரும்!
"சொந்த
நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே
துஞ்சிடோம
- இனி அஞ்சிடோம்"
என்ற
வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க - அதன் வாயை அடைக்க
- எவரால் இயலும்?
செந்தமிழ்க்
கடலே! இக் கரையில் கொஞ்சம்
இடம் வேண்டும் என்று கெஞ்சிய வெள்ளைக்காரன் இன்று மிஞ்சி விட்டான்; கோட்டை வளைத்தான்; நமக்குக் கேட்டை விளைத்தான்; இந்நகரை வெள்ளை யர் பாக்கம் என்றும்,
கறுப்பர் பாக்கம் என்றும் பிரித்தானே! வெள்ளையர் மேலோராம்; கறுப்பர் கீழோராம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பரந்த கொள்கையைப் பழித்து நிற்பது வெள்ளையர் ஆட்சி. அது வீழ்ந்தே தீரும்.
"என்
அருமைத் தமிழ்க் கடலே! அது விழு கின்ற
நாளிலே பாரத சமுதாயம் ஒன்று
பட்டு வாழும். சாதிப் பூசல்கள் ஒழியும்; சமயப் பிணக் கங்கள் அழியும்; தமிழ் நாடு தலையெடுக்கும். அப்போது,
"உழவுக்கும்
தொழிலுக்கும்
வந்தனை
செய்வோம்-வீணில்
உண்டுகளித்
திருப்போரை
நிந்தனை
செய்வோம்"
என்று
ஆடுவோம்; பள்ளுப் பாடுவோம்; 'ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்' என்று அகம் களித்து இக்
கடற்கரையில் இறுமாந்து உலாவு வோம்" என்று ஏறுபோல் நடந்து சென்றார் பாரதியார்.
ஆசிரியர்
: ரா.பி. சேதுபிள்ளை