Saturday, June 15, 2024

Revenue inspector roles and responsibilities/(RI)-வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்

RI - Revenue Inspector வருவாய் ஆய்வாளரின் கடமைகளும் பொறுப்புகளும்

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை, வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் பட்டியலிட்டுள்ளது.

 

  1. பயிராய்வு
  2. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.
  3. நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
  4. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.
  5. மற்றும்பிமெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.
  6. புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.
  7. ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.
  8. இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.
  9. முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.
  10. பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
  11. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.
  12. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
  13. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
  14. வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
  15. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
  16. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.
  17. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.
  18. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.
  19. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
  20. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.
  21. பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.
  22. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
  23. முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.
  24. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு கோப்புகளை தணிக்கை செய்தல்.
  25. கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.
  26. புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்

பிற பணிகள்

  • பொது இடங்களில் உள்ள மரங்களின் மதிப்பு நிர்ணயம் செய்தல்
  • நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.
  • கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.
  • வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.
  • சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.
  • தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.
  • மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
  • கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.
  • கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
  • பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.
  • மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.
  • வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.

பாரதியார்-(Mahakavi Subramania Bharatiyar) கட்டுரை

 மகாகவி சுப்ரமணிய பாரதியார். (1882 - 1921).

தமிழ் நாட்டுக்குப் புத்துயிரும் வாழ்வும் அளித்தவர் பாரதியார். பாருக்குள்ளே நல்ல நாடு - பண்பும் பழமையும் வாய்ந்த நாடு-பாரதப் பெரு நாடு- உரிமையிழந்து, பெருமைகுன்றி, வெள்ளை யாட்சி யில் குறுகி நின்ற நிலை கண்டு அவர் மனம் கொதித் தார். 'இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனாவாசம்' என்பதை நன்றாக அறிந்திருந்தும் வெள்ளையார் ஆட்சியை எதிர்த்தார் அவ்வீரர்; பாட்டாலும் உரையாலும் தமிழ் நாட்டாரைத் தட்டி எழுப்பி வீர சுதாந்தர வேட்கையை ஊட்டினார். சென்னையம் பதியின் கண்ணென விளங்கும் திருவல்லிக்கேணியிலே பல்லாண்டு வாழ்ந்தார் பாரதியார்; நாள் தோறும் அந்திமாலையில் கடற்காரையிலே நின்று ஆவேசமாய்ப் பாடுவார்; ஒருநாள் அக்கடலை நோக்கி ஆர்வமுறப் பேசலுற்றார்:-

 

"அருந்தமிழ்க் கடலே! இன்று உன்னைக் காண ஏனோ என் உள்ளம் களிக்கின்றது! நீள நினைந்து நெஞ்சம் தழைக்கின்றது! 'எங்கள் அருமைத் தமிழகத்தை வாழ்விக்க வந்த வள்ளுவர் முன்னாளில் உன்னைக் கண்டார்; உன் காற்றை உண்டார்; உன் கரையில் உலாவினார்' என்று எண்ணும்பொழுது இன்பம் பொங்குகின்றது என் உள்ளத்தில்! 'உன் மணற் பரப்பிலே நன்னீர் சுரந்து, அல்லி மலர் பூத்து நின்ற கேணிதான் அக் கவிஞர் பெருமான் கருத்தைக் கவர்ந்ததோ?' 'தொட்டனைத் தூறும் மணற்கேணி' என்ற அருமைத் திருக்குறள் உன் அருகேயுள்ள திருவல்லிக்கேணியைத்தான் குறித்ததோ? இளங்காற்றளித்துச் சிறு நன்மை செய்த உனக்கு எத்துணை அருமையான கைம்மாறு அளித்துவிட்டார் அப்பெருமான்! உன் அல்லி மணற் கேணிக்கு அழியாப் பெரும் பதம் அளித்து விட்டாரே! அவர் வாழ்த்துரையால்தான் திருவல்லிக் கேணிக்கு வாழ்வின்மேல் வாழ்வு வருகின்றதோ?

 

"நீலத்திரைக் கடலே! உன்னைக் கடைக்கணித்த அப்பெருந்தகையை ஏழையேன் என்சொல்லி ஏத்துவேன்? மாநிலமெங்கும் புகழ் பெற்று விளங்கும் அப் பெருமானைத் தமிழகம் செய்த தவக் கொழுந்து என்பனோ? நானிலம் செய்த நற்றவத்தின் பயன் என்பனோ? ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி என்பனோ? செந்தமிழ்ச் செம்மணிகளாய் இலங்கும் மும்மணிகளுள் அவரே நடு நாயகமாய்க் காட்சி தருகின்றார். புனிதமான அக்காட்சியை என் புன் கவியால் எழுதிக் காட்ட முடியுமா?ஆயினும் கடுக்கின்றது ஆசை; கதிக்கின்றது கவிதை.

 

"கல்விசி றந்தத மிழ்நாடு-புகழ்க்

கம்பன்பி றந்தத மிழ்நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத் தின்மணம்

பாரெங்கும் விசும்த மிழ்நாடு.

வள்ளுவன் தன்னைஉ லகினுக் கேதந்து

வான்புகழ் கொண்டத மிழ்நாடு-நெஞ்சை

அள்ளும்சி லப்பதி காரமென் றோர்மணி

ஆரம்ப டைத்தத மிழ்நாடு"

 

என்று பாடுவேன்; ஆனந்தக் கூத்து ஆடுவேன்.

 

"நல்லோர் போற்றும் அல்லிக்கேணியே! உன் மலர்க்கேணியின் அழகைக் கண்டுதான் மாமுகில் வண்ணன் அதனருகே கோயில் கொண்டானோ? அன்று பஞ்சவருக்குத் துணை புரிந்த அஞ்சன வண்ணன் - பார்த்தனுக்குப் பாகனாகிய பரந்தாமன்- அறப்பெருந் துணைவன் - அடியார்க்கு எளியன் - நின்னகத்தே நின்று அருள் புரிகின்றான். அந்தக்

 

"கண்ணைக் கண்டேன் - எங்கள்

கண்ணனைக் கண்டேன் மணி

வண்ணனை ஞான மயிலினைக் கண்டேன்."

 

"தொல்புகழ் வாய்ந்த அல்லிக்கேணியே! இந்நாளில் உன் அருமையை அறிவார் யார்? உன் கடற்கரையில் அன்று தமிழ்த் தென்றல் தவழ்ந்தது; இன்று மேல் காற்று வீசுகின்றது. அன்று உன் அரங்கத்தில் எங்கள் தமிழன்னை ஆனந்த நடனம் புரிந்தாள்; இன்று, ஆங்கில மாது களியாட்டம் ஆடுகின்றாள். அவளுடைய வெள்ளை நாவிலே தெள்ளிய தமிழ் வளம் ஏறுமா? அவள் இறுமாந்த செவியிலே தேமதுரத் தமிழோசை சேருமா? அந்தோ! திருவல்லிக்கேணியே! வேற்றரசின் கொடுமையால், நீ சீர் இழந்தாய்; பேர் இழந்தாய்; 'திரிப்பளிக்கே'னாகத் திரிந்துவிட்டாய்!

 

"அல்லிக் கருங்கடலே! உன் அழகமைந்த கரையிலே, வெள்ளையர் விளையாடித் திரிகின்றார்; வெறியாட்டயர்கின்றார்; உலாவுகின்றார்; குலாவுகின்றார். அவரைக் கண்டு அஞ்சி, நம்மவர் நெஞ்சம் குலைகின்றாரே! சிப்பாயைக் கண்டால் அச்சம்; துப்பாக்கியைக் கண்டால் நடுக்கம்; சட்டைக் காரனைக் கண்டால் குட்டிக் காரணம். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? பிறந்த நாட்டில் பிறர்க் கடிமை செய்தல் பேதைமை யன்றோ?

 

"அறப்பெருங் கடலே! வீர சுதந்தர வேட்கை இந் நாட்டிலே வேரூன்றி விட்டது. இனி அதை அசைக்க எவராலும் ஆகாது. வந்தேமாதரம் என்ற மந்திர மொழியால் பாரத நாட்டைத் தட்டி எழுப்பிய பாலகங்காதர திலகரை அரசாங்கத்தார் சிறையில் மாட்டலாம். தென்னாட்டுத் திலகர் என்று பேர் பெற்ற எங்கள் சிதம்பரனாரைச் சிறைக் கோட்டத் தில் அடைக்கலாம்; செக்கிழுக்க வைக்கலாம்; துச்சமாக எண்ணித் தூறு செய்யலாம். ஆயினும், அவர் மூட்டிய கனல் வெள்ளையர் ஆட்சியை வீட்டியே தீரும்!

 

"சொந்த நாட்டில் பிறர்க்கடி மைசெய்தே

துஞ்சிடோம - இனி அஞ்சிடோம்"

 

என்ற வீர சுதந்தர வேகத்தை நிறுத்த யாரால் முடியும்? எரிமலையைத் தடுக்க - அதன் வாயை அடைக்க - எவரால் இயலும்?

 

செந்தமிழ்க் கடலே! இக் கரையில் கொஞ்சம் இடம் வேண்டும் என்று கெஞ்சிய வெள்ளைக்காரன் இன்று மிஞ்சி விட்டான்; கோட்டை வளைத்தான்; நமக்குக் கேட்டை விளைத்தான்; இந்நகரை வெள்ளை யர் பாக்கம் என்றும், கறுப்பர் பாக்கம் என்றும் பிரித்தானே! வெள்ளையர் மேலோராம்; கறுப்பர் கீழோராம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று பரந்த கொள்கையைப் பழித்து நிற்பது வெள்ளையர் ஆட்சி. அது வீழ்ந்தே தீரும்.

 

"என் அருமைத் தமிழ்க் கடலே! அது விழு கின்ற நாளிலே பாரத சமுதாயம் ஒன்று பட்டு வாழும். சாதிப் பூசல்கள் ஒழியும்; சமயப் பிணக் கங்கள் அழியும்; தமிழ் நாடு தலையெடுக்கும். அப்போது,

 

"உழவுக்கும் தொழிலுக்கும்

வந்தனை செய்வோம்-வீணில்

உண்டுகளித் திருப்போரை

நிந்தனை செய்வோம்"

 

என்று ஆடுவோம்; பள்ளுப் பாடுவோம்; 'ஆனந்த சுதந்தரம் அடைந்து விட்டோம்' என்று அகம் களித்து இக் கடற்கரையில் இறுமாந்து உலாவு வோம்" என்று ஏறுபோல் நடந்து சென்றார் பாரதியார்.

 

ஆசிரியர் : ரா.பி. சேதுபிள்ளை

Friday, June 14, 2024

புலால் உண்ணாமை

வள்ளலார் சைவ சமய கொள்கைகளின்படி, பிற உயிர்களைக் கொன்று உண்பதை தவிர்க்க வேண்டும் என்பதை போதித்தார்.

வள்ளலார் சமூக சீர்திருத்தத்தின் முன்னோடியாக இருந்தார். அனைத்து உயிர்களிடத்திலும் இறை அருள் இருப்பதாக நம்பினார். எனவே, எந்த உயிரினையும் கொடுமைப்படுத்துவது அல்லது காயப்படுத்துவது இறைவனுக்கு எதிரான செயல் என  அவர் கருதினார். புலால் உண்ணாமையை கடைப்பிடிப்பதன் மூலம், அருவருத்தம் இல்லாத வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும் என்று அவர் வாதிட்டார்.

வள்ளலாரின் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் அவரது காலத்தில் மிகவும் முற்போக்கானவை எனக் கருதப்படுகிறது. அனைத்து உயிர்களையும் மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அழைப்பு இன்றும் பொருத்தமானதாக உள்ளது.

வள்ளலார் தத்துவம்: ஒரு பார்வை

 அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை

வள்ளலாரின் தத்துவத்தின் அடிப்படை கருத்து "அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை". இறைவன் அருள் ஒளியாகவும், அருள் மழையாகவும் உலகெங்கிலும் நிறைந்து இருப்பதாக வள்ளலார் கூறுகிறார். அந்த அருளை உணர்ந்து, அதனுடன் இணைவதே மனித வாழ்வின் நோக்கம் என்பதே அவரது போதனை.

சமரச சுத்த சன்மார்க்கம்

வள்ளலார் "சமரச சுத்த சன்மார்க்கம்" என்ற புதிய சமயத்தை உருவாக்கினார். இது அனைத்து சமயங்களையும், மதங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு சமரச சமயமாகும்.

சமூக சீர்திருத்தம்

வள்ளலார் சமூக சீர்திருத்தத்திலும் முக்கிய பங்கு வகித்தார். சாதி வேறுபாடுகளை ஒழிப்பது, பெண்களுக்கு சம உரிமை அளிப்பது, வறுமையை ஒழிப்பது போன்ற பல சமூக சீர்திருத்த கருத்துக்களை அவர் முன்வைத்தார்.

ஜோதி வழிபாடு

வள்ளலார் ஜோதி வழிபாட்டை அறிமுகப்படுத்தினார். இதில், அருள் ஒளியாகிய இறைவனை ஜோதியாக வழிபடுவது முக்கிய அம்சமாகும்.

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள்:

  • அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை
  • சமரச சுத்த சன்மார்க்கம்
  • சமூக சீர்திருத்தம்
  • ஜோதி வழிபாடு
  • அருட்பா வழிபாடு
  • ஞான வழிபாடு
  • இயற்கை வழிபாடு

வள்ளலாரின் தாக்கம்:

வள்ளலாரின் தத்துவம் தமிழ்நாட்டில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது போதனைகள் பல சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு உத்வேகமாக அமைந்தன. இன்றும், வள்ளலார் ஒரு முக்கிய சமய, சமூக தலைவராக போற்றப்படுகிறார்.

வள்ளலாரைப் பற்றி மேலும் அறிய:

வள்ளலார் தத்துவம் பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன?

வள்ளலார் தத்துவம் பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Saturday, December 3, 2022

SRMIST- UBA தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் கீழ் பொத்தேரி ஏரி கரையோர சாலைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கம்

 SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, காட்டாங்குளத்தூர் மற்றும் உன்னத் பாரத் அபியான் (UBA-SRM IST)  NCC மற்றும் யுனிவர்சல் மனித மதிப்புகள் (UHV) உடன் இணைந்து " பொக்கிஷத்தை குப்பையில் போடாதே" என்ற கருப்பொருளுடன்  தூய்மை இந்தியா பிரச்சாரத்தின் கீழ் இன்று   (டிசம்பர் 03, 2022)  காலை 6 மணிக்கு பொத்தேரி ஏரி கரையோர சாலைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.


டாக்டர்.வ.திருமுருகன் (இணை இயக்குனர் (சிஎல்) மற்றும் நோடல் அதிகாரி (யுபிஏ-எஸ்ஆர்எம்ஐஎஸ்டி) இந்த நடவடிக்கைக்கு பங்கேற்பாளர்களை வரவேற்றார்.  நிகழ்வை டாக்டர் எம்.வைரமணி (டீன்-பயோ இன்ஜினியரிங்) துவக்கி வைத்தார். நாட்டின் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து மகாத்மா காந்திஜியின் தொலைநோக்கு பார்வையை அவர் முன்வைத்தார்.நாட்டின் குடிமகனாக தெருக்களையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்றார் .


டாக்டர்.பி.சுப்ரஜா பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் -யுஎச்வி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அறிவுரைகளையும்  பங்கேற்பாளர்களுக்கான பாதுகாப்பையும் வழங்கினார்.  


பொத்தேரி ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதை , சாலைகள் தூய்மை செய்யும் இந்த இயக்கத்தில்  மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சேகரிக்கப்பட்ட கழிவுகளின்  மொத்த எடை 361 கிலோவாகும்.


Tuesday, October 25, 2022

சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை புதிய பாடத்திட்டம்

சென்னை பல்கலைக்கழகத்தின் நிலங்களை புதிய பாடத்திட்டம் பிளண்டட இளங்கலை பட்டப்படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மாணவரகள் இளங்கலை பட்டப்படிப்பு  படிக்கும் போதே ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே இதன் சிறப்பு. மாணவ மாணவியருக்கு ஆய்வுக்கூட வசதிகள் கிண்டி வளாகத்தில் உள்ள பல்வேறு அறிவியல் துறைகள் ஒருங்கிணைந்து இந்த வசதியை வழங்க முன் வைத்திருக்கின்றனர். உயர்ந்த தரம் நல்ல வசதி குறைந்த கட்டணம் ஆகியவை இளங்கலை பட்டப்படிப்பு உள்ளது என்பது கல்வியாளர்களின் கருத்து.மெல்போர்ன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பாடம் நடத்துவார்கள்.அவரகளுடன் இணைந்து தயாரிக்க பட்ட பாடங்கள் நடத்தப்படுகின்றன என்பதால் இந்தப் பட்டப் படிப்பு உலகம் முழுவதும் அங்கீகரிக்கப் படுகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் மேற்படிப்பை தொடர முடியும் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள நம் பல்கலைக்கழகத்தில் இந்த படிப்பு கொடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஒரு விதத்தில் வரப்பிரசாதம். 184 பேர் விண்ணப்பித்துள்ளனர்  அவர்களின் தகுதி அடிப்படையில் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதுவரை 18 மாணவர்கள் சேர்த்துள்ளதாகவும் வரும் நாட்களில் இதன் முக்கியத்துவம் கருதி மேலும் பலர் சேர வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.  பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் குறைந்த கட்டணத்தில் அளிக்கிறது அரிய சந்தர்ப்பம் பிளஸ் டூ முடித்தவர்கள் வரவேண்டும் சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை பாடத்திட்டம் பிளண்டட படிக்க.

Monday, October 24, 2022

25.10.2022 செய்திகள் ஒரு கண்ணோட்டம்

25.10.2022
 செய்திகள் ஒரு  கண்ணோட்டம் 1.இந்தியா எப்போதும் போரை விரும்புவதில்லை என்றும் அதே சமயம் அமைதியை பராமரிப்பதில் படைபலம் அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


தீபாவளி பண்டிகையை ஒட்டி  பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவது தீபாவளி என்று கூறியவர் பாதுகாப்பு படைகளின் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலை வணங்குவதாக தெரிவித்தார் இந்திய ராணுவத்தின் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல் ஒன்றை பாடி பிரதமர் மோடி தனது உரையை நிறைவு செய்துள்ளார்

2. ஐநாவின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் 


3.மழைநீர் வடிகால் பணிகள் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார் .



3.சூரிய கிரகணம் இன்று மாலை நிகழ்கிறது.

இந்தியாவில் சூரிய கிரகணம் இன்று மாலை மணி 4 29 முதல் மணி ஐந்து நாற்பத்தி இரண்டு வரை நிகழ உள்ளது இது பகுதி சூரிய கிரகணம் நாட்டின் அனைத்து இடங்களிலும் தென்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள் தமிழகத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே காண முடியும்

யாரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க வேண்டும் என்பதோ அந்த சமயத்தில் உணவை அருந்தி என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை இதனையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயில் காலை மணி 8 11 முதல் இரவு 7 மணி வரை மூடப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது கிரகணத்தை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நடை சாத்தப்படுவது அறிவிக்கப்பட்டுள்ளது

4.பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது.

     

5.அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்மா சூரசங்காரம் வரும் 30ஆம் தேதி மாலை கோவில் கடற்கரையில் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்கான பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

 6. கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது .

7.காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நகரின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு இனிப்புகள் வழங்கினார்.
 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More