Tuesday, May 8, 2012

இடிந்தகரையில் 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிப்பு

வள்ளியூர், மே 8: அணுஉலையை எதிர்த்து இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் மக்களிடமிருந்து செவ்வாய்க்கிழமை 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டன. இவை புதன்கிழமை ராதாபுரம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் மக்களிடம் அரசு அதிகாரிகள் எந்தவித பேச்சு வார்த்தைக்கும் வராததையடுத்து, தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்தனர்.  அதன்படி இடிந்தகரை, தோமையார்புரம், பெருமணல், கூடுதாழை, கூடங்குளம், வைராவிக்கிணறு, கூத்தங்குழி, கூட்டப்பனை, ஆவுடையாள்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  இதுவரை 24,000 வாக்காளர் அடையாள அட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன் தெரிவித்தார். இது தவிர அணுஉலை வேண்டாம் என திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த கிராம மக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.  கையெழுத்திடப்பட்ட நோட்டுகளையும் கிராம மக்கள் போராட்டக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். கிராம மக்கள் நோட்டில் போடப்பட்டுள்ள கையெழுத்தின் அருகே தங்களது குடும்பஅட்டையின் எண்ணையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த கையெழுத்து நோட்டை நீதிமன்றங்களில் நீதிபதிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.  மதிப்புமிக்க இந்தியா இயக்கம் தொடக்கம்: இந்த நிலையில் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மதிப்புமிக்க இந்தியா என்ற இயக்கத்தை இடிந்தகரையில் செவ்வாய்க்கிழமை தொடங்கினர்.  இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது:  கூடங்குளம் அணு உலை வேண்டாம் என அணுஉலை அமைத்திருக்கின்ற பகுதி மக்களும், பிற பகுதியில் இருக்கும் மக்களும் ஒருமித்த குரல் கொடுத்துவரும் நிலையில், ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துகள் ஏற்கப்படவில்லை. எனவே, வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம்.  இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் 7 இடங்களில் அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கெல்லாம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றார்.

கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்



கேரளத்தில் பிற மாநிலத் தொழிலாளர் பதிவது கட்டாயம்

  09 May 2012


 திருவனந்தபுரம், மே 8: கேரளத்தில் பணியாற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அருகில் உள்ள காவல் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  மாநிலத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கேரள உள்துறை அமைச்சர் திருவச்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். முன்னதாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.  வெளி மாநில தொழிலாளர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதன் மூலம், அவர்களின் பின்னணியையும், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா என்பதையும் எளிதில் கண்காணிக்க கேரள போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.  பாதுகாப்பு பிரச்னைக்காக மட்டுமின்றி, நலத்திட்டங்களை செயல்படுத்தவும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களைப் பதிவு செய்வது உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

சென்னை, மே.9: டிஎன்பிஎஸ்சி குரூப் 2-ல் 138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 4 பதவிகளில் அடங்கியுள்ள 138 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதாவது, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலைய அதிகாரி-19 இடங்கள், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் 111(28 பின்னடைவு காலி பணியிடங்கள்),வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் ஸ்டோர் கீப்பர்- 7, தொழிற்சாலை கூட்டுறவு சங்க உதவி மேற்பார்வையாளர்-1 ஆகிய இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இந்த பதவிகளுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி நாள். வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்த ஜூன் 4ம் தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு ஜூலை 28ம் தேதி நடக்கிறது. இந்த பதவிகளுக்கான வயது, கல்வி தகுதிகள், பொது தகவல்கள், தேர்வு முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், வழிகாட்டல்கள், சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் மற்றும் இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களை போட்டி தேர்வாளர்கள் தேர்வாணைய இணையதள முகவரியான www.tnpsc.gov.in மற்றும் www. tnpscexams.net ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தனியார் பள்ளிகளில் 15% கூடுதல் கட்டணம்: இணையதளத்தில் பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அரசு தனித்தனியே கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டது. இந்த கட்டணத்தை எதிர்த்து 384 தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் ’நீதிபதி கே.ரவிராஜ பாண்டியன் கமிட்டி நிர்ணயித்த கட்டணங்களை எதிர்த்து 2.5.2012-க்குள் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டும் 2012-2013-ம் கல்வி ஆண்டுக்கு மட்டும் இடைக்கால ஏற்பாடாக அந்த குழு நிர்ணயித்த கட்டணத்துடன் 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதைத்தொடர்ந்து, கட்டணத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணம் மற்றும் உயர் நீதிமன்றம் நிர்ணயித்த 15 சதவீத கூடுதல் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இதை மீறி செயல்படும் பள்ளிகள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த நிலையில், கூடுதல் 15 சதவீத கட்டணம் வசூலிக்கும் 384 பள்ளிகளின் பட்டியல் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
 
இதுதொடர்பாக மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி நேற்று வெளியிட்ட அறிக்கையில், `கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணங்களை எதிர்த்து சில தனியார் பள்ளிகளால் வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணை பெறப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் பொதுமக்கள், பெற்றோர் நலன் கருதி இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

Monday, May 7, 2012

SRM University cancels SRMEE 2012 exam in AP after leak

CHENNAI: The SRM University has cancelled the entrance examination for BTech courses conducted on Sunday for entire Andhra Pradesh following a question paper leak.
Vice-Chancellor of SRM M Ponnavaikko told Express that the university was now in close contact with AP police who have arrested two persons in connection with the leak.
A decision on whether to cancel the examination for the entire country would be made if instances of question paper leak in other states come to notice, he added.
Meanwhile, the Madhapur police in Andhra Pradesh said they have arrested K Praneeth, a former student of the university, after parents of some students found him selling the answer key for the examination for Rs 60,000. Praneeth passed out of the university in 2011.
Registrar N Sethuraman said that about 30,000 students appeared for the examination in over 60 centres in Andhra Pradesh.

Saturday, May 5, 2012

ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!


ஆரோக்கியம் தரும் 'குளு குளு' இளநீர்!

இயற்கையின் வரப்பிரசாதம் தான் இளநீர். மனிதனின் அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்ட பானங்களுள் இளநீருக்கு முக்கிய பங்குண்டு. இந்த இளநீர் ஒரு முழு உணவு. இது மக்களின் நீர் தாகத்தைப் போக்குவதுடன் உடலுக்கு உற்சாகத்தையும், குளிர்ச்சியையும் கொடுக்கும் இயற்கை டானிக் ஆகும். இளநீரில் மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவக் குணங்கள் உள்ளது. இது மிகவும் சுத்தமானதும், சுகாதாரமானதும் ஆ...கும். இத்தகைய இளநீரில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உள்ளன.

இளநீர் அருந்துவதால் என்ன பயன்?

தினமும் இளநீர் அருந்தி வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும். வயிற்று நோய்கள் அகலும்.

பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் இளநீர் தீர்க்கும்.

இளநீர் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும் மற்றும் இரத்தச் சோகையைப் போக்குகிறது.

இரத்தக் கொதிப்பைக் குறைப்பதால் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

நாவறட்சி, தொண்டைவலி ஆகியவை நீங்கும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயின் தாக்குதல் கொண்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். அம்மை நோயின் தாக்கம் கண்டவர்கள் இளநீர் அருந்தினால் நோயின் வீரியம் குறையும்.

மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர் படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு.

தேன் கலந்து அருந்தினால் தாது விருத்தியாகி ஆண்மை சக்தியை பெருக்கும்.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு இது ஒரு அருமருந்து. இளநீர் தினமும் அருந்தினால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கல் தீரும்.

ஆகவே இளநீர் பருகுவீர்! நீண்டநாள் ஆரோக்கியம் பெற்று வாழ்வீர்!


Thursday, May 3, 2012

தமிழகம் இன்று









நாடு முழுவதும் கடந்த 13 நாட்களாக பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய அலெக்ஸ்பால் மேனனின் கடத்தல் சம்பவம்  இன்று மாலை சுமார் 6,30 மணிக்கு முடிவுக்கு வந்தது. விடுவிக்கப்பட்டார் என்று கூறப்பட்ட கடைசி நேரத்திலும் கூட தெளிவான தகவல் இல்லாமல் நிமிடத்திற்கு நிமிடம் எகிறிய இதயத் துடிப்பு, அலெக்ஸ் பாலை நேரில் பார்த்த பின்னரே சீரானது. மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பாலை அழைத்துக் கொண்டு தூதர்கள் வந்தார்கள் .  ----------------------------------------------------------------------------------------------------     





  






 
          Facebook சமூக தளம் வெறும் பொழுதுபோக்குக்கானது என்ற நிலையிலிருந்து விடுபட்டு, வேறு பல புதிய சேவைகளையும் தரத் தொடங்கியுள்ளது.    அவ்வகையில் தற்போது விலை மதிப்பற்ற மனித உயிரைக் காக்கும் புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. Facebook உறுப்பினர்கள் உடலுறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களாக இருந்தால், அந்த தகவலை அவர்களது தளத்தின் முதல் பக்கத்தில் குறிப்பிட வேண்டும் என Facebook நிறுவனர் தெரிவித்தார்  --------------------------------------------------------------------------------------- 






  வரி உயர்வு நடவடிக்கை மூலம் தங்க இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு போராடி வரும் நிலையில், பெண்கள் நகை வாங்குவதை ஊக்குவிக்க வரிச்சலுகைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்க நகை வாங்கினால் வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்று இந்திய மதிப்புமிக்க கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.   ------------------------------------------------------------------------------------------------------- 






 இந்திய திரைப்பட உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டு வருகிறது. தமிழில் வாகை சூடவா, அழகர்சாமியின் குதிரை, ஆரண்ய காண்டம் ஆகிய மூன்று படங்கள் ஐந்து விருதுகளை பெற்றுள்ளன. டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று 59வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. --------------------------------------------------------------------------------------------------- 







நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
      இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இருக்கும் சூழலில் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடருமானால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளார்.






நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 13வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். இந்த வேலைநிறுத்தத்தால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு செல்லாததால், நிலக்கரி வெட்டி எடுக்கும் இயந்திரங்கள் இயக்கபடவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை .------------------------------------------------------------------------------------------------ 






மதுரை ஆதினத்தின் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இளைய மடாதிபதி நித்தியானந்தா நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் கவுதமன் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் கர்ணன்,ரவிச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்தனர். நித்தியானந்தா இளைய மடாதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மதுரை ஆதினத்தில் இருந்த நிலையே தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More